Cricket, India, Dhoni, Twitter, Sri Lanka

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

Cricket, India, Dhoni, Twitter, Sri Lanka
Rohit Sharma Captain of India and Thisara Perera Captain of Sri Lanka during the Toss before the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதற்கான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

தொடக்கத்திலேயே பும்ரா வீசிய பந்தில் குணாதிலகா அவுட் ஆனார். அதன் பிறகு தரங்காவுடன் ஜோடி சேர்ந்த சமரவிக்ரமா அதிரடியாக விளையாடி ரன்னை சேர்த்து வந்தார்கள். அந்த ஜோடி பொறுமையாக ரன் சேர்க்க இந்திய பந்துவீச்சாளர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திணறி கொண்டிருந்தார்கள்.

இலங்கையை மீண்டும் நசுக்கியதும் இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் ஜாலி 1
India’s Kuldeep Yadav successfully appeals for LBW against West Indies’ Shai Hope during the second One Day International (ODI) match between West Indies and India at the Queen’s Park Oval in Port of Spain, Trinidad, on June 25, 2017. / AFP PHOTO / Jewel SAMAD (Photo credit should read JEWEL SAMAD/AFP/Getty Images)

குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரை சிறப்பாக வீசினார். தரங்கா மற்றும் சமரவிக்ரமா ஜோடியை யுஸ்வேந்த்ர சஹால் பிரித்தார். அதன் பிறகு 95 ரன்னில் இருந்த தரங்கா, நட்சத்திர வீரர் மத்தியூஸ், அதிரடி வீரர் டிக்வெல்லா ஆகியோரின் விக்கெட்டை எடுத்து மீண்டும் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.

அதன் பிறகு இலங்கை அணியின் பேட்டிங் வரிசை சீட்டு கட்டு போல் மளமளவென சரிந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி 215 ரன்னில் சுருண்டது. இதனால், இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அணியை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

https://twitter.com/AmbrishSaxena12/status/942332519260622848

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.