Cricket, India, Sri Lanka, Virat Kohli

தற்போது இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மழை அடிக்கடி குறிக்கிட்டதால், த்ரில்லிங்காக சென்ற போட்டி கடைசியில் சமனில் முடிந்தது. இந்நிலையில்,இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த டெஸ்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அஸ்வின் (4), இசாந்த் சர்மா (3), ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 8 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 2 ரன்களுடனும களத்தில் இருந்தனர்.

முரளி விஜய் 112 பந்தில் 6 பவுண்டரியுடனும், புஜாரா 145 பந்தில் 7 பவுண்டரியுடனும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின்னர் முரளி விஜய் அதிரடியாக விளையாடினார். அவர் 187 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். 2-வது அரைசதம் அடிக்க 75 பந்துகளே எடுத்துக் கொண்டார்.

சதம் அடித்த பிறகு முரளி விஜய் அவுட் ஆக, புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கோலி. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் புஜாரா சதம் அடிக்க, கோலி சதம் அடித்து களத்தில் இருந்தார்கள். மூன்றாவது நாள் தொடக்கத்தில் தனது 19வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார் கேப்டன் விராட் கோலி.

அதன் பிறகு புஜாரா அவுட் ஆக விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா அரைசதம் அடிக்க, தனது 5வது இரட்டை சதத்தை அடித்தார் விராட் கோலி. இதனால், ட்விட்டரில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். பாருங்கள்:

https://twitter.com/YashR06/status/934721449067204609

https://twitter.com/SajiSRKian_/status/934721433631997953

https://twitter.com/BeingJasmin7/status/934721406989770752

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *