சென்னையிடம் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான்; ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் !! 1

சென்னையிடம் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான்; ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்

ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் – சென்னை  இடையேயான இன்றைய போட்டியில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

புனே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு  செய்தார்.

சென்னையிடம் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான்; ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேன் வாட்சன் 106 ரன்களும், சுரேஷ் ரெய்னா 46 ரன்களும், பிராவோ 24 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 204 ரன்கள் எடுத்தது.

சென்னையிடம் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான்; ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் !! 3

இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 30 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணியின் மூன்று முக்கிய வீரர்களான ரஹானே(16), க்ளேசன்(7), சாம்சன்(2) என வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் கூட்டணி சற்று நேரம் தாக்குபிடித்து நிதானமாக ரன் குவித்தது.

சென்னையிடம் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான்; ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் !! 4

பட்லர் 22 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 45 ரன்களிலும் விக்கெட்டை இழந்தது தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 18.3 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றியை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதில் சில;

https://twitter.com/SamreenRazzaqui/status/987359922357760000

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *