நியூசிலாந்து அணியை ஈசியாக காலி செய்த இந்திய அணி; பாராட்டும் கிரிக்கெட் உலகம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் மிக இலகுவாக கைப்பற்றிய இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், கிளன் பிலிப்ஸ் (36), பிரேஸ்வெல் (22) மற்றும் சாட்னர் (27) ஆகிய மூன்று வீரர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால், 34.3 ஓவரில் வெறும் 108 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் ஹர்திக் பாண்டியா மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்பின் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா 51 ரன்களும், சுப்மன் கில் 40* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20.1 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
இந்தநிலையில், சமகால கிரிக்கெட்டின் வலுவான அணிகளுள் ஒன்றான நியூசிலாந்து அணியை மிக இலகுவாக வீழ்த்தி தொடரையும் வென்ற இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சுப்மன் கில், முகமது சிராஜ், முகமது ஷமி போன்ற வீரர்களையும் முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதில் சில;
This series win is even better than the last one. Well done team india 👏 #INDVSNZODI
— Irfan Pathan (@IrfanPathan) January 21, 2023
Interesting to see what kind of method Kohli employs v spin in the BGT.
— Bharath Ramaraj (@Fancricket12) January 21, 2023
NZ Batters today 😁#INDvNZ pic.twitter.com/8hXW60kTP7
— S.Badrinath (@s_badrinath) January 21, 2023
Fastest Chase by India in ODI
11.3 Overs vs KEN (2001)
14.5 Overs vs WI (2018)
18.4 Overs vs ENG (2022)
18.5 Overs vs UAE (2015)
19.1 Overs vs SA (2022)
20.1 Overs vs NZ (Today)*#INDvsNZ— CricBeat (@Cric_beat) January 21, 2023
India won this ODI match against New Zealand 179 balls left – This is the 3rd biggest win for India in terms of balls left in ODI history.
— CricketMAN2 (@ImTanujSingh) January 21, 2023
🏆 𝗦𝗘𝗥𝗜𝗘𝗦 𝗩𝗜𝗖𝗧𝗢𝗥𝗬! Congratulations to the Men in Blue on completing their 7️⃣th bilateral ODI series victory against the Kiwis at home.
💪 Good job, boys!
📷 Getty • #INDvNZ #NZvIND #TeamIndia #BharatArmy pic.twitter.com/5F6oR3avct
— The Bharat Army (@thebharatarmy) January 21, 2023
India won another series at HOME.
Sheer dominance from Team India.
Top-notch bowling by @mdsirajofficial and @MdShami11 Once again very good start by @ImRo45 and @ShubmanGill.#INDvNZ #IndvsNZ2ndODI— Satya 🇮🇳 (@satyasaibrahma) January 21, 2023
This is called dominance ! Now Farid won’t be able to tweet like he did when India beat Sri Lanka, Farid was saying Sri Lankan team minnows.
They are Asian champions right now. Now India beat worlds no 1 side ! What to say !! #INDvNZ— Ravindra Bisht | रविन्द्र बिष्ट 🇮🇳 (@RavindraBishtUk) January 21, 2023
Been that way for so many years….was so enjoyable watching Rohit bat this evening.
— Harsha Bhogle (@bhogleharsha) January 21, 2023