ஹேமில்டனில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்துI

தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சேஹலுக்குப் பதிலாக, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

நான்காவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வீரர்களின் ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு 92 ரன்னில் இந்திய அணி சுருண்டது, இதே மைதானத்தில்தான் என்பதால், இந்தப் போட்டியிலும் பிட்ச் அப்படித்தான் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பிட்ச் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருக்கும் என்றும் முதலில் பேட் செய்யும் அணி, 200 ரன்னுக்கு மேல் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கிறது பிட்ச் ரிப்போர்ட்.

அணி விவரம்:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், விஜய் சங்கர், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

நியூசிலாந்து:
டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), முன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிராண்ட்ஹோம், சன்ட்னர், டிம் சவுதி, சோதி, பிளேர்

நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.

அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

 

 

 

 

 

 

 

 

https://twitter.com/summiprasad/status/1094541425914662912

 

 

 

 

 

 

  • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...