தரமான வெற்றி... 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற இந்திய அணி; குவியும் வாழ்த்துக்கள் !! 1

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் போட்டி ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தரமான வெற்றி... 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற இந்திய அணி; குவியும் வாழ்த்துக்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் சகப்வா (34) மற்றும் பிராட் எவன்ஸ் (33*) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 40.3 ஓவரில் வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், அக்‌ஷர் பட்டேல் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தரமான வெற்றி... 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற இந்திய அணி; குவியும் வாழ்த்துக்கள் !! 3

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில்லும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட இந்த கூட்டணி, இலகுவாக ரன்னும் குவித்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களின் அனைத்து திட்டங்களையும் முறியடித்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி 30.5 ஓவரில் இலக்கையும் அடைந்து இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்துள்ளது. ஷிகர் தவான் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தரமான வெற்றி... 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற இந்திய அணி; குவியும் வாழ்த்துக்கள் !! 4

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமான தீபக் சாஹர், அக்‌ஷர் பட்டேல், சுப்மன் கில், தவான் போன்ற வீரர்களையும் முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அதில் சில;

 

Leave a comment

Your email address will not be published.