Cricket, India, Sri Lanka, Ms Dhoni, Bhuvneshwar Kumar, Ravi Shastri

இலங்கையுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா நேற்று 3 விக்கெட் வித்யாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடசியாக 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தோனி மற்றும் புவனேஷ்வர் குமார் சரியாக 100 ரன் பார்ட்னர்சிப் ஆடி இந்தியாவை த்ரில்லாக கரை சேர்த்தனர். இந்த வெற்றியை ட்விட்டர் வாசிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் கொண்டாடியது மட்டுமில்லாமல், தோனி மற்றும் புவனேஷ்வர் ஆகியோரை பாராட்டி புகழ்ந்து தள்ளினர்.

அதில் சிலவற்றை தற்போது காண்போம்.

 

 

ஒரு கட்டத்தில் 108 ரன்னுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடிவந்த இந்திய அணி 131க்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

ஆட்டத்தின் போக்கை மிக நன்றாக உணர்ந்த தோனி புவனேஷ்வர் குமாருடன் சேர்ந்து மெதுவாக தன் போக்கில் ஆட்டத்தை இந்திய பக்கம் திருப்பினார். மிகவும் பொருமையாக அனைத்து பந்துகளுக்கும் அவசரம் இல்லாமல் சரியான சாட்டுகளை தேர்வு செய்து ஆடியது இந்த ஜோடி. அங்கு அங்கு கிடைக்கும் ஒன்று இரண்டுகளை தேடித்தேடி எடுத்தது.

இது போன்ற தருணங்களில் மிக அருமையாக தனது திறமையை அடிக்கடி காட்டி வருபவர் தோனி. இந்த போட்டியிளும் தனது அனுபவத்தைக் காட்டினார் தோனி. மறுபக்கம் மிக அருமையாக ஆடி வந்தார் புவனேஷ்வர் குமார். 7 ஓவர்களுக்கு 36 ரன் அடிக்க வேண்டியிருந்த நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் 4 பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார் புவனேஷ்வர் குமார். 77 பந்துகளில் அரை சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த ஜோடி 100 ரன் அடித்தது.

இந்திய வெற்றி, ட்விட்டரில் கொண்டாட்டம் 1

இந்தியா 3 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. 8ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் பல சாதனைகளை தகர்த்தனர். இறிதியாக இந்தியா 16  பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 3 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில் அகிலா தனஞ்சயா 10 ஓவர்களில் 54 ரன் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார் 80 பந்துகளில் 53 ரன் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். இத வெற்றியுடன் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

https://twitter.com/hvgoenka/status/900782581808996352

Leave a comment

Your email address will not be published.