நியூசிலாந்து அணியை ஈசியாக காலி செய்த இந்திய அணி; பாராட்டும் ரசிகர்கள் !! 1
நியூசிலாந்து அணியை ஈசியாக காலி செய்த இந்திய அணி; பாராட்டும் ரசிகர்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியை ஈசியாக காலி செய்த இந்திய அணி; பாராட்டும் ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 112 ரன்களும், ரோஹித் சர்மா 101 ரன்களும், ஹர்திக் பாண்டியா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 385 ரன்கள் குவித்தது.

இதன்பின் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பின் ஆலன் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.

நியூசிலாந்து அணியை ஈசியாக காலி செய்த இந்திய அணி; பாராட்டும் ரசிகர்கள் !! 3

 

ஹென்ரி நிக்கோலஸ் (42), டேரியல் மிட்செல் (24), பிரேஸ்வெல் (26) போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டை இழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நீண்டநேரம் தாக்குபிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீவன் கான்வே 100 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் எடுத்து கொடுத்தார். டீவன் கான்வேவை தவிர மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 41.2 ஓவரில் 295 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியை ஈசியாக காலி செய்த இந்திய அணி; பாராட்டும் ரசிகர்கள் !! 4

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போல் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

நியூசிலாந்து அணியை ஈசியாக காலி செய்த இந்திய அணி; பாராட்டும் ரசிகர்கள் !! 5

இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சுப்மன் கில், ரோஹித் சர்மா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் போன்ற வீரர்களையும் முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அதில் சில;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *