மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்; செம கடுப்பில் ரசிகர்கள் !! 1

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை மிக மோசமாக இழந்துள்ள இந்திய அணி ரசிகர்களின் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்; செம கடுப்பில் ரசிகர்கள் !! 2

போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85 ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும் எடுத்தனர்.

மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்; செம கடுப்பில் ரசிகர்கள் !! 3

இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக அடித்து விளையாடியது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் 66 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான ஜென்னாமென் மாலன் 91 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்; செம கடுப்பில் ரசிகர்கள் !! 4

இதன்பின் வந்த டெம்பா பவுமா (35), மார்கரம் (37*) மற்றும் வான் டெர் டூசன் (37*) என அனைத்து வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 48.1 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.

மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்; செம கடுப்பில் ரசிகர்கள் !! 5

சமகால கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக அறியப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த மோசமான தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு காரணமான வீரர்கள் சிலர் இந்திய ரசிகர்களாலே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல் சீனியர் வீரர்கள் பலர் இல்லாத நிலையில், இந்திய அணியை மிக எளிதாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது தென் ஆப்ரிக்கா அணிக்கும் அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

Leave a comment

Your email address will not be published.