ரசிகர்களுக்கு ஒரு ஷாக் ; 4வது டெஸ்டிலிருந்து விலகும் இரண்டு முக்கிய வீரர்கள் !
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு ரன்அவுட் செய்திருந்தார். இதன்பிறகு பேட்டிங் செய்த ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா பந்து வீசவில்லை.

நேற்று இரவு ஜடேஜாவுக்கு சர்ஜரி செய்துள்ளதால் இன்னும் ஆறு வாரத்திற்கு விளையாட முடியாது. இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் விஹாரி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது தொடைப்பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. விஹாரி முதலுதவி மட்டும் மேற்கொண்டு காயத்தை பொருட்படுத்தாமல் தனது அணிக்காக மீண்டும் விளையாடத் தொடங்கினார்.

இறுதியில் விஹாரி மற்றும் அஸ்வின் இணைந்து போட்டியை ட்ரா செய்தனர். ஆனால் விஹாரி தனது காயத்திலிருந்து மீண்டு வர 4 வாரங்கள் தேவைப்படுவதால் 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் ஏற்கனவே முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ், விராட் கோலி என அனைவரும் வெளியேறி இருப்பது அணிக்கு மாபெரும் இழப்பாக இருக்கிறது. தற்போது இவர்கள் இருவரும் அணையில் இருந்து விலகியுள்ளது மீண்டும் இந்திய அணிக்கு சிக்கல ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் பதிலாக அணியில் யார் இடம் பெறுவது என்பது குழப்பமாக இருக்கிறது.