ஐபிஎல்லில் திடீர் திருப்பம் ; ஏலத்திற்கு பின் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக்கொள்ளும் இரண்டு முக்கிய அணிகள் ! 1

பஞ்சாப் அணியின் சர்பராஸ் கான் மற்றும் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா ஆகியோர் டிரேடிங் மூலம் மாற்றிக் கொள்ள இருக்கிறார்கள்.

2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

“இதனால்தான் இலங்கை வீரர்கள் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை” - உண்மையை கூறிய குமார் சங்கக்கரா ! 2

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜாமிசன் – 15 கோடி, மேஸ்வெல் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, கிருஷ்ணப்ப கவுதம் – 9.25 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள். ஆனால் ஆரோன் பின்ச் போன்ற அனுபவ வீரர்கள் பலர் எந்த அணியிலும் இடம் பெறவில்லை. இதுபோக சில வீரர்கள் டிரேடிங் மூலம் இரு அணிகளுக்கிடையே மாற்றப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் ஐபிஎல் ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வீரர்களை இரு அணிகளுக்கிடையே மாற்றிக்கொள்ள டிரேடிங் முறை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்கும் ஒரு வாரத்திற்கு முன்புவரை இத்றகான கால அவகாசம் இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் மேலும் மாற்றங்கள் செய்து கொள்ள முடியும். 

ஐபிஎல்லில் திடீர் திருப்பம் ; ஏலத்திற்கு பின் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக்கொள்ளும் இரண்டு முக்கிய அணிகள் ! 2

அந்த வகையில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் இந்த டிரேடிங் முறையை பயன்படுத்தி வீரர்களை மாற்றிக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பஞ்சாப் அணியின் சர்பராஸ் கான் மற்றும் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா ஆகியோர்  டிரேடிங் மூலம் மாற்றிக் கொள்ள இருக்கிறார்கள்.

ஹைதராபாத் அணி சர்பராஸ் கான் வேண்டும் என்று பஞ்சாப் அணியிடம் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேலும் சில அணிகள் இதன்மூலம் வீரர்களை மாற்றிக் கொள்ள திட்டமிட்டு வருவதாக பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்லில் திடீர் திருப்பம் ; ஏலத்திற்கு பின் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக்கொள்ளும் இரண்டு முக்கிய அணிகள் ! 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *