Cricket, Umar Akmal, Pakistan, Rumour

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் உமர் அக்மல் இறந்து விட்டதாக இணையதளத்தில் செய்தியாக பரவியது, ஆனால் ட்விட்டரில் வந்து வீடியோ பதிவு செய்து, அதெல்லாம் கட்டு கதை தான் என உறுதி படுத்தினார் உமர் அக்மல்.

“கடவுளே, நான் நன்றாக இருக்கிறேன், லாஹூரில் தான் இருக்கிறேன், இணைய தளங்களில் வந்தது அனைத்தும் கட்டுகதை,” என ட்வீட் செய்தார் உமர் அக்மல்.

அட பாவிங்களா, நான் இன்னும் சாகல - உமர் அக்மல் 1
DUBAI, UNITED ARAB EMIRATES – SEPTEMBER 19: Umar Akmal of Pakistan in action during a net session at ICC Cricket Academy on September 19, 2016 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருந்த அவர் பல போட்டிகளை பாகிஸ்தான் அணிக்காக வென்று தந்துள்ளார். ஆனால், தற்போது அவர் மொக்கை பார்மில் இருப்பதால், அவரை பாகிஸ்தான் அணியில் சேர்ப்பதே இல்லை.

Umar Akmal, Death Rumour, Clarification, Pakistan, National T20 Cup,
Umar has failed to maintain is a body. Photo Credit: Getty Images.

“நான் நன்றாக இருக்கிறேன், லாஹூரில் தான் இருக்கிறேன், இணைய தளங்களில் வந்தது அனைத்தும் கட்டுகதை, இது போன்று தயவுசெய்து செய்யாதீர்கள்,” என உமர் அக்மல் ட்வீட் செய்தார்.

“கடவுளின் அருளால், நான் நன்றாக தான் இருக்கிறேன். இணையதளங்களில் வருவது அனைத்தும் பொய்,” என அவர் மேலும் கூறினார்.

“நான் இன்று அரையிறுதி போட்டியில் விளையாடுவேன். இது போன்று செய்திகளை தயவுசெய்து பரப்பாதீர்கள்,” என அவர் ட்வீட் செய்தார்.

Umar Akmal, Death Rumour, Clarification, Pakistan, National T20 Cup,
Umar faced the wrath of Pakistan coach Mickey Arthur recently. Photo Credit: Getty Images.

நேஷனல் டி20 கோப்பையின் அரையிறுதி போட்டி நவம்பர் 29 (புதன்கிழமை) அன்றும், இறுதி போட்டி நவம்பர் 30ஆம் தேதி அன்றும் நடைபெறும்.

இணையதளத்தில் வைரல் ஆகிய போட்டோ, உமர் அக்மலை போலவே, ரிவால்ப்பாண்டியில் உள்ள ஹபிஸ் முகமது அடீலின் முகத்தை வைத்து எடிட் செய்துள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Umar Akmal, Death Rumour, Clarification, Pakistan, National T20 Cup,
Umar represented Lahore Qalandars in the first two editions of PSL. Photo Credit: PCB.

பாகிஸ்தான் அணிக்காக 2009இல் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகம் ஆன உமர் அக்மல், இது வரை 116 ஒருநாள் போட்டிகள், 82 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப முயற்சிக்கிறார்.

Umar Akmal, Death Rumour, Clarification, Pakistan, National T20 Cup,
Umar wants to make his return with impressive performances. Photo Credit: Getty Images.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *