இங்கிலாந்து அணியுடனான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி, சீனியர் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ம் தேதி துவங்க உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதே போல் மறுபுறம் இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு வலு சேர்க்கும் விதமாக, சீனியர் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்ததால், சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஸ்பின்னர்கள் மீது கவனம் செலுத்தி இரண்டே ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, 3வது டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் என்பதால் பிங்க் பந்து பயன்படுத்தப்படும். அதனால் அடுத்த போட்டியில் 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்க இந்திய அணி திட்டமிட்டிருப்பதால், பும்ராஹ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருடன் உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிகிறது.
NEWS: @y_umesh added to #TeamIndia squad for the last two @Paytm #INDvENG Tests.
— BCCI (@BCCI) February 22, 2021
Details 👉 https://t.co/PO6nBt8JWu pic.twitter.com/Ek796rZ0Is
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ஆடிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தில் வீசிய அனுபவம் கொண்ட உமேஷின் சேர்க்கை இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.