வெறியை கக்கிய உமேஷ் யாதவ், அஸ்வின்.. 197 ரன்களுக்கு ஆல்அவுட்.. மீண்டும் ஆட்டத்திற்குள் வந்த இந்தியா...! 1

உமேஷ் யாதவ், அஸ்வின் இருவரின் வெறித்தனமான பந்துவீச்சால் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது இந்திய அணி. 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி.

இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தடுமாற்றம் கண்டது.

வெறியை கக்கிய உமேஷ் யாதவ், அஸ்வின்.. 197 ரன்களுக்கு ஆல்அவுட்.. மீண்டும் ஆட்டத்திற்குள் வந்த இந்தியா...! 2

தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர் உஸ்மான் கவாஜா நன்றாக விளையாடி மிகமுக்கியமான 60 ரன்கள் அடித்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த லபுஜானே 31 ரன்களை அடித்து ஆட்டம் இழந்தார்.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிறிது நேரம் நன்றாக விளையாடு வந்தாலும் ஜடேஜாவின் பந்தில் 29 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்திய அணி மெல்ல மெல்ல விக்கெட்டுகளை எடுக்க துவங்கியது. முதல் நாள் முடிவில் 156 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலியா அணிக்கு களத்தில் கேமரூன் கிரீன் மற்றும் பீட்டர் ஹான்ஸ்கோம் இருவரும் இருந்தனர். ஜடேஜா நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

வெறியை கக்கிய உமேஷ் யாதவ், அஸ்வின்.. 197 ரன்களுக்கு ஆல்அவுட்.. மீண்டும் ஆட்டத்திற்குள் வந்த இந்தியா...! 3

47 ரன்கள் முன்னிலையுடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்கத்தில் விக்கெட் விழவில்லை. ட்ரிங்க்ஸ் இடைவேளை வரை இந்திய அணி பவுலர்கள் சற்று தடுமாற்றம் கண்டனர்.

ட்ரிங்ஸ் முடிந்து, பவுலிங் செய்த அஸ்வின் ஒரு விக்கெட்டை எடுக்க, அடுத்து வந்த உமேஷ் யாதவ் வரிசையாக அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார். இறுதியாக 197 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது.

வெறியை கக்கிய உமேஷ் யாதவ், அஸ்வின்.. 197 ரன்களுக்கு ஆல்அவுட்.. மீண்டும் ஆட்டத்திற்குள் வந்த இந்தியா...! 4

இன்று இரண்டாம் நாளில் 41 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கட்டுகளை இழந்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தற்போது வரை ஆஸ்திரேலியா அணி 88 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *