கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்கிறார் உமேஷ் யாதவ் !! 1
கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்கிறார் உமேஷ் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணி 4.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்கிறார் உமேஷ் யாதவ் !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்கிறார் உமேஷ் யாதவ் !! 3

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில், 8 அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை எடுக்க பங்கேற்றுள்ளனர்.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை, மும்பை இந்தியன்ஸ் அணி 4.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இவருக்கு இதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *