கடைசி நேரத்தில் இவருக்கு மட்டும் ஓவர் கொடுக்காதீங்க ப்ளீஸ்... இந்திய அணியிடம் கோரிக்கை வைக்கும் இர்பான் பதான் !! 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் 208 ரன்கள் எடுத்த போதிலும் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கடைசி நேரத்தில் இவருக்கு மட்டும் ஓவர் கொடுக்காதீங்க ப்ளீஸ்... இந்திய அணியிடம் கோரிக்கை வைக்கும் இர்பான் பதான் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 71* ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

கடைசி நேரத்தில் இவருக்கு மட்டும் ஓவர் கொடுக்காதீங்க ப்ளீஸ்... இந்திய அணியிடம் கோரிக்கை வைக்கும் இர்பான் பதான் !! 3

இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமிரான் க்ரீன் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் (1), இங்லீஸ் (17) ஆகியோர் பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த டிம் டேவிட் – மேத்யூ வேட் ஜோடி இந்திய அணியின் அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தது. டிம் டேவிட் 18 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத மேத்யூ வேட் 21 பந்துகளில் 45* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.2 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

கடைசி நேரத்தில் இவருக்கு மட்டும் ஓவர் கொடுக்காதீங்க ப்ளீஸ்... இந்திய அணியிடம் கோரிக்கை வைக்கும் இர்பான் பதான் !! 4

சொந்த மண்ணில், அதுவும் 208 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து முன்னாள் வீரரான இர்பான் பதான், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “திரும்பவும் சொல்கிறேன், கடைசி ஐந்து ஓவர்களில் ஒரு ஓவர் மட்டும் புவனேஷ்வர் குமாருக்கு கொடுங்க” என பதிவிட்டுள்ளார்.

ஒரு சில போட்டிகளில் புவனேஷ்வர் குமார் மிக சிறப்பாக பந்துவீசினாலும், முக்கியமான போட்டிகளில் மிக அதிகமான ரன்களை வாரி வழங்குவதை வாடிக்கையாக வைத்து வருகிறார், குறிப்பாக போட்டியின் வெற்றியை தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவர்களில் புவனேஷ்வர் குமார் அதிகமான ரன்களை வழங்கி வருவதால் தான் இர்பான் பதான், புவனேஷ்வர் குமாரை கடைசி நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.