14வது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மன்கள் சிஎஸ்கே பவுலர்களின் சூழ்ச்சியில் சிக்கி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர். சிஎஸ்கே பவுலர் தீபக் சஹார் பஞ்சாப் பேட்ஸ்மன்களை திணற வைத்தார்.

விக்கெட் எடுத்துவிட்டு "Vaathi coming" பாடலுக்கு நடனமாடிய பிரோவா ! வைரலாகும் வீடியோ ! 2

இவர் தனது பந்துவீச்சின் மூலம் மயங்க் அகர்வால், கெயில், பூரன், தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட் எடுத்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் தமிழக வீரர் ஷாருக்கான் தனியாளாக நின்று 47 ரன்கள் குவித்து கொடுத்து இருக்கிறார். சிஎஸ்கே பவுலர்கள் தீபக் சஹார் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்து இருக்கின்றனர்.

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 15.4 ஓவரிலே இலக்கை எட்டி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கின்றனர். இதில் டூபிளெசிஸ் 36 ரன்களும், மொயின் அலி 46 ரன்களும் அடித்து இருக்கின்றனர். பஞ்சாப் சார்பாக முகமது ஷமி 2 விக்கெட்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

விக்கெட் எடுத்துவிட்டு "Vaathi coming" பாடலுக்கு நடனமாடிய பிரோவா ! வைரலாகும் வீடியோ ! 3

இந்த போட்டியில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் பிராவோ ஆட்டத்தின் 17வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் பஞ்சாப் வீரர் முருகன் அஸ்வின் டூபிளெசிஸிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார். இதை பிராவோ மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலில் ஆடும் நடனத்தை ஆடிய கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *