இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 1

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்துள்ள மிக மோசமான தோல்வியால் ஏற்பட்டுள்ள வேதனையை வார்த்தைகளில் சொல்ல முடியாது என விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ப்ரித்வி ஷாவிற்கு இடம் கிடைக்காது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 74 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 191 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 3

இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு, ப்ரிதிவ் ஷா 4 ரன்னில் விக்கெட்டை இழந்து மிகப்பெரும் ஏமாற்றம் கொடுத்தார். ப்ரித்வி ஷா தான் சின்ன பையன் அடுத்தடுத்து வரும் அனுபவ வீரர்கள் பார்த்து கொள்வார்கள் என ரசிகர்கள் நம்பிய நிலையில் அடுத்தடுத்து களமிறங்கிய சீனியர் வீரர்களோ ப்ரித்வி ஷாவை விட மோசமாக விளையாடி வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாததால் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. ஷமி காயம் காரணமாக பேட்டிங் செய்யாததால் ஆல் அவுட்டாகாமல் தப்பித்து கொண்ட இந்திய அணி 36 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 4

இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 21 ஓவரிலேயே அசால்டாக இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி, தோல்வியால் ஏற்பட்டுள்ள வேதனையை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பட்ட அசிங்கத்திற்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கோலி வேதனை !! 5

இது குறித்து விராட் கோலி பேசுகையில், “வெறும் வார்த்தைகளுக்குள் இந்த உணர்வை வெளிப்படுத்துவது மிகவும் கஷ்டம். 60 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய எங்கள் பேட்டிங் ஆர்டர் அப்படியே சரிந்துவிட்டது. இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டத்தை வெறும் ஒரு மணி நேரத்தில் வீணடித்து விட்டோம். மிகுந்த வேதனையாக உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே இன்னும் மாற்றமும், முன்னேற்றமும் தேவை. நாங்கள் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்த டெஸ்ட் போட்டி உணர்த்தியுள்ளது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த போட்டியில் நம் வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன். முகமது ஷமிக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் நிலை குறித்து இன்னும் சரியாக தெரியவில்லை. ஸ்கேன் பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *