வெற்றிக்கு இது தான் காரணம்; ஆஸ்திரேலிய கேப்டன் பெருமிதம்

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, அடுத்து, ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. அந்த அணியில், ஹேண்ட்கோம்ப் 73, கவாஜா 59, மார்ஸ் 54 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப், புவனேஸ்வர் குமார் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.

289 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தவான், ராயுடு டக் அவுட் ஆக, கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் ஏமாற்றினார். இதனையடுத்து, ரோகித் சர்மாவும், தோனியும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். தோனி நிதானமாக விளையாட, ரோகித் சற்றே அடித்து விளையாடி ரன்களை சேர்த்தார். இந்திய அணி 25.2 ஓவரில் 100 ரன்களை எட்டியது.

93 பந்தில் அரைசதம் அடித்த தோனி, 51 ரன்னில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்திருந்தது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 12 ரன்னில் நடையைக் கட்டினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 110 பந்தில் சதம் விளாசினார். 42.3 ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. வெற்றி பெற இன்னும் 6 ஓவர்களில் 76 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. சதம் அடித்த உடன் ரோகித் சிக்ஸரும், பவுண்டரியுமான விளாசினார். இருப்பினும் 129 பந்தில் 133 ரன் அவுட் ஆனார். இந்திய அணி வெற்றி பெற  இறுதிவரை போராடியது. இருப்பினும், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பு 254 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் அரோன் பின்ச் பேசியதாவது, “நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். 288 ரன்கள் என்பதே வெற்றிக்கு போதுமான இலக்கு தான். மிடில் ஓவர்களில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக உஸ்மான் கவாஜா – சேன் மார்ஸின் பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது. பந்துவீச்சில் இன்னும் சில முனேற்றங்கள் தேவை. இந்த தொடர் மிகச்சிறந்த கிரிக்கெட் தொடர்” என்றார்.



  • SHARE

    விவரம் காண

    உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை !!

    உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தான் இடம்பிடிப்பேன் என இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர்...

    ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் !!

    ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டுமென இந்திய அணியின் முன்னாள்...

    விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா !!

    விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட்...

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

    தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

    தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...