அஷ்வின் தனது கவுண்ட்டிக்கு பயணம்

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி சாம்பியன்சிப் முதல் தர போட்டியில் விளையாட இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து பயணம் செய்தார் அஷ்வின்.

தற்போது அவரது இடத்தில் இருந்து அவர் விளையாடும் கவுண்ட்டி அணியான வோர்சிஸ்டர்சைர் செல்ல பிரிம்பிங்காம் விமானத்தில் இருந்தபடி ஒரு படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அஷ்வின்.

Off to the ?? now, can't wait to enjoy my stint with Worcester ccc. #countycricket #dream #thejourney

A post shared by Ravichandran Ashwin (@rashwin99) on

இங்கிலாந்து கவுன்ட்டி அணியான வோர்சிஸ்டர்ஷையர் அணி அஸ்வினை தங்கள் அணிக்கு ஆட ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது

இலங்கை உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு அஷ்வின் உள்ளிட்ட முன்னனி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணியுடான தொடர் வரை அவர்களுக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Ticket to Birmingham ??? #goodvibes #traveldiaries

A post shared by Ravichandran Ashwin (@rashwin99) on

இதனால் அங்கு இரண்டு போட்டிகள் மட்டும் விளையாடுவார் எனத்தெரிகிறது. அதன் பின்னர் அவர் இந்தியா திரும்ப வேண்டும். இதற்க்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் சம்மதம் தெரிவித்துள்ளது என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு தற்போது கவுண்ட்டி சாம்பியசிப் தொடர் நடந்து வருகிறது. அங்கு சென்று கலந்து கொள்ளும் அவர் குறைந்தது இரண்டு 5 நாள் போட்டிகளில் ஆவது கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர் இந்தியா திரும்ப வேண்டும். இதற்க்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் சம்மதம் தெரிவித்துள்ளது என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளியாட உள்ளது. அதில் பங்கேற்க்கும் பொருட்டு அதற்கான பயிற்ச்சியாகவும் இந்த கவுன்ட்டி போட்டிகள் அமையும். கடந்த முறை இங்கிலாந்து தொடரில் விளையாடிய தோனி தலைமையிளான இந்திய அணியில் அஸ்வின் ஒரே ஒரு டெஸ்ட் ல் மட்டுமே ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழக்கப்படாத  அந்த இங்கிலாந்து மண்ணில் அஸ்வின் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த கவுண்ட்டி உடனான போட்டிகள் அவரை ஸ்பின்னுக்கு பெரிதும் உதவாத இங்கிலாந்து மண் மேம்படுத்தும் என் நம்புவோம்.

கடந்த காலங்களில் ஆனால் கடந்த காலங்களில் செட்டேஸ்வர் புஜரா கௌதம் கம்பீர், ஜாகிர்கான், ராகுல் ராவிட் போன்ற்ற இந்திய வீரர்கள் கௌவுன்டி சாம்பின்ஷிப் முதல்தர போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சச்சின் டெண்டுல்கர் கூட கௌவுன்டி சாம்பியன்ஷிப் முதல்தர போட்டியில் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சு பயிற்ச்சியாளார் பரத் :

2019 ஒரு நாள் உலக கோப்பையில் அஸ்வின் விளையாடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரியா வாய்ப்பாக அமையும் என இந்திய அணியில் பந்து வீச்சு பயிற்ச்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார். அவர் இந்திய அணிக்கு ஒரு நாள் உலகக்கோப்பையில் பெரும் பங்கு வகிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

சமீப காலமாக அஸ்வினை பற்றிய கேள்விகள் முன்னர் வீரர்களிடமிருந்தும் ஜாம்பவாங்கலிடமிருந்தும் வந்த வண்ணம் உள்ளது. அதே போல் தற்போது அந்த கூட்டனியில் முனாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியும் இணைந்துள்ளார். அதாவது ஒரு நாள் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பங்கு என்ன? அவர் எந்த வகையில் அணிக்கு பொருத்தமாக உள்ளார் என கேள்விகளை எழுப்பினார்.

ஒரு நாள் அணியில் அவரது இடம் கேள்விகுள்ளாகியுள்ளது. மேலும், அவர் அனியில் இருந்து மிக விரைவில் கழட்டிவிடபடுவார். ஒரு நாள் போட்டிகளில் சரியா ஆடுவதில்லை. கடசியாக நடந்த 10 ஒரு நாள் போட்டிகளில் 8 விக்கெட்டுகளை மட்டுமே கைபற்றியுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். • SHARE

  விவரம் காண

  ‘பிங்க் டெஸ்ட்’ முதல் நாள்: பேட்டிங்கிலும் இந்தியா பலே.. முழி பிதுங்கும் வங்கதேசம்..!

  பிங்க் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 68 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இந்தியா...

  கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்த விராட் கோஹ்லி; முதல் கேப்டன் என்ற பெருமை !!

  கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்த விராட் கோஹ்லி; முதல் கேப்டன் என்ற பெருமை வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம்...

  வீடியோ; வங்கதேச வீரருக்கு வைத்தியம் பார்த்த இந்திய பிசியோ; குவியும் பாராட்டுக்கள் !!

  வீடியோ; வங்கதேச வீரருக்கு வைத்தியம் பார்த்த இந்திய பிசியோ; குவியும் பாராட்டுக்கள் இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட்...

  காட்டடி அடிக்கும் கிறிஸ் லின்; கடுப்பில் கொல்கத்தா ரசிகர்கள் !!

  காட்டடி அடிக்கும் கிறிஸ் லின்; கடுப்பில் கொல்கத்தா ரசிகர்கள் கேகேஆர் அணியிலிருந்து அண்மையில் கழட்டிவிடப்பட்ட ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின், அபுதாபி டி10...

  வங்கதேசத்தை 106 ரன்களுக்கு பொட்டலம் கட்டிய இந்திய வேகபந்துவீச்சாளர்கள்.. ட்விட்டரில் கொண்டாடிய ரசிகர்கள்!

  கொல்கத்தாவில் நடைபெற்று வரும் பிங்க் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 106 ரன்களுக்கு சுருண்டது. இதற்கு ட்விட்டரில் ரசிகர்கள் கருத்தை...