வீடியோ: பேட்டிங்ல நான் ஹெட்மாஸ்டர்டா.. ஸ்பின்னரை ஆடுவதற்கு… ரைட் ஹேண்ட் பேட்டிங் செய்த டேவிட் வார்னர்!

மும்பை சுழல்பந்துவீச்சாளரை எதிக்கொள்ள வலதுகை பேட்டிங் செய்தார் டேவிட் வார்னர். இதன் விடியோவை கீழே பார்ப்போம்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பௌலிங் தேர்வு செய்திருக்கிறார்.

இப்போட்டியில் பிரித்வி ஷா ஆட்டம் இழந்த பிறகு, உள்ளே வந்த மனிஷ் பாண்டே மற்றும் டேவிட் வார்னர் இருவரும் பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைத்து வந்தனர். அப்போது மும்பை இந்தியன்ஸ் இளம் சுழல்பந்துவீச்சாளர் ஹிருத்திக் ஷோக்கீன் நோ பால் வீசினார்.

ஃப்ரீ ஹிட் பந்தை டேவிட் வார்னர் எதிர்கொண்டார். அந்த நேரத்தில் வழக்கமாக இடதுகை பேட்ஸ்மேன் ஆக இருந்து வரும் டேவிட் வார்னர், சுழல்பந்துவீச்சாளரை எதிர்கொள்ள வலது கை பேட்டிங் செய்தார். இதன் வீடியோவை கீழே காணலாம்.

வீடியோ:

டெல்லி அணியின் இன்னிங்ஸ் சுருக்கம்

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிரிதிவி ஷா இருவரும் களமிறங்கினர். பிரிதிவி ஷா அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை அடித்து 10 பந்துகளில் 15 ரன்களுக்கு இளம் சுழல்பந்துவீச்சாளர் ஹிருத்திக் ஷோக்கீன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து உள்ளே வந்த மனிஷ் பாண்டே வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். 5 பவுண்டரிகள் அடித்து 18 பந்துகளில் 26 ரன்களுக்கு அவுட்டானார்.

அறிமுக வீரர் இளம் பேட்ஸ்மேன் யாஷ் துல் 4 பந்துகளில் 2 ரன்கள், ரோவ்மன் பவல் 4 பந்துகளில் 4 ரன்கள் என இருவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியதால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தடுமாறிவரும் டெல்லி அணிக்கு, ஒரு பக்கத்தில் நின்றுகொண்டு நம்பிக்கையளித்து வருகிறார் டேவிட் வார்னர். இவர் 37 பந்துகளில் 46 ரன்களுடன் டேவிட் வார்னர் ஆடி வருகிறார்.

கடந்த போட்டியில் அசத்திய லலித் யாதவ் இப்போட்டியில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்து சாவ்லா பந்தில் அவுட்டாகி வெளியேறினார். சாவ்லா-விற்கு இது 3ஆவது விக்கெட்டாகும்.

டெல்லி அணி 14 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் அடித்து திணறிவருகிறது. களத்தில் டேவிட் வார்னர் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆடி வருகின்றனர். # டேவிட் வார்னர்

 

 

Mohamed:

This website uses cookies.