வீடியோ : கால்பந்து விளையாடி களைத்துப் போய் வரும் தோணிக்கு தண்ணீர் கொடுக்கும் மகள் ஜீவா !! 1

நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனத்திற்காகவும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியின் அறக்கட்டளைக்காகவும் நிதி திரட்டும் பொருட்டு, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், பாலிவுட் நடிகர்களும் பங்கேற்ற கால்பந்து போட்டி மும்பையில் நேற்று நடைப்பெற்றது.வீடியோ : கால்பந்து விளையாடி களைத்துப் போய் வரும் தோணிக்கு தண்ணீர் கொடுக்கும் மகள் ஜீவா !! 2

கேப்டன் கோலி தலைமையிலான விளையாட்டு வீரர்களின் அணிக்கு “ஆல் ஹார்ட் எஃப்சி” என்றும், ரன்பிர் கபூர் தலைமையிலான திரை நட்சத்திரங்களின் அணிக்கு “ஆல் ஸ்டார்ஸ் எஃப்சி” என்றும் பெயரிடப்பட்டிருந்தது.

ஆல் ஹார்ட் எஃப்சி அணியில் தோனி, கோலி, கே.எல். ராகுல், கேதார் ஜாதவ், ஷிகர் தவான், அனிருதா ஸ்ரீகாந்த், உமேஷ் யாதவ், மணிஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார், ஷ்ரேயாஸ் அய்யர், யுவேந்திர சாஹல், ஹர்திக் பாண்டியா, ஜாகீர் கான், ஜஸ்ப்ரித் பும்ரா, சுப்ரமணியம் பத்ரிநாத், பவன் நெகி, இந்தியா ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீஜேஷ், டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.வீடியோ : கால்பந்து விளையாடி களைத்துப் போய் வரும் தோணிக்கு தண்ணீர் கொடுக்கும் மகள் ஜீவா !! 3

ஆல் ஸ்டார்ஸ் எஃப்சி அணியில் அபிஷேக் பச்சன், ரன்பிர் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், ஆதித்யாராய் கபூர், அர்ஜூன் கபூர், தினோ மோரியா, கார்த்திக் ஆர்யன், அர்மன் ஜெயின், ஷபிர் அலுவாலியா, நிஷாந்த் மேஹ்ரா, சச்சின் ஜோஷி, கரன் வீர் மேஹ்ரா, விக்ரம் தாபா, ரோஹன் ஷ்ரெஸ்தா, ஹர்பிரீத் பாவேஜா, ஷஷங் கைதான் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

போட்டி தொடங்கிய 5-வது நிமிடமே, ஆல் ஹார்ட் எஃப்சி அணியின் தோனி கோல் அடித்தார். தொடர்ந்து 39-வது நிமிடத்தில் தோனி இரண்டாவது கோல் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து அனிருதா ஸ்ரீகாந்த் 2 கோல்களும், கோலி, கேதர் ஜாதவ், ஷிகர் தவான் உள்ளிட்டோர் தலா 1 கோலும் போட்டு அசத்தினர்.வீடியோ : கால்பந்து விளையாடி களைத்துப் போய் வரும் தோணிக்கு தண்ணீர் கொடுக்கும் மகள் ஜீவா !! 4

முடிவில் கோலி தலைமையிலான ஆல் ஹார்ட் அணி 7-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆல் ஸ்டார்ஸ் எஃப்சி அணியில் ரன்பிர் கபூர், ஷபீர் ஆகியோர் கோல் அடித்தனர். இரண்டு கோல்கள் அடித்து அசத்திய தோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தப் போட்டியின் போது, இரண்டு கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த தந்தை தோனிக்கு, மழலை மணம் மாறாத மகள் ஜிவா, தன் கையால் தண்ணீர் தரும் வீடியோ வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம், தோனி வைரலாகிராறோ இல்லையோ, அவரது மகள் ஜிவா வாராவாரம் தவறாமல் வைரல் ஆகிவிடுகிறார். போகிறபோக்கைப் பார்த்தால், தோனி ரசிகர்கள் ‘ஜிவா ஆர்மி’ தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இந்தியாவுடனான ஆஸ்திரேலியத் தொடருக்குபின், நியூசிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர் முதல் வாரம் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணி இந்த போட்டிகளுக்காக இந்தியாவில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி  வரை சுற்றுப்யணம் மேற்கொள்ளவுள்ளது.

நியூசிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட இந்தியாவின் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிடில் ஆரடர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஷ்ருதுல் தகூர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.நெ.10 ஜெர்சி

ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷ்  ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகொயோர் யோ-யோ உடல் தகுதி தேர்வில் தோல்வி அடந்தைதால் அவர்கள் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், அஜின்கியா ரகானே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷ்ரதுல் தகூர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *