இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 288 ரன்கள் எடுத்துள்ளது.

சிட்னியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆஸி. அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஃபிஞ்சை 6 ரன்களில் போல்ட் செய்தார் புவனேஸ்வர் குமார். விக்கெட் கீப்பர் கேரி நன்குத் தொடங்கினார். ஆனால், 24 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கவாஜாவும் ஷான் மார்ஷும் பொறுப்புடன் விளையாடி மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். 22.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஆஸ்திரேலிய அணி. 70 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்த கவாஜா, 59 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

நன்கு விளையாடிய மார்ஷ், 65 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆனால் அதன்பிறகு சிக்ஸ் அடிக்க முயன்று குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அடுத்த 10 ஓவர்களுக்கு ஹேண்ட்ஸ்காம்பும் ஸ்டாய்னிஸூம் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனாலும் சிறிது நேரம் பவுண்டரிகள் எதுவும் அடிக்காமல் ஆடினார்கள். குல்தீப் வீசிய 44-வது ஓவரில் ஸ்டாய்னிஸும் ஹேண்ட்ஸ்காம்பும் தலா ஒரு சிக்ஸர் அடித்தார்கள். அப்போது 45 பந்துகளுக்குப் பிறகுதான் ஒரு பவுண்டரி அடித்தது ஆஸ்திரேலியா. 50 பந்துகளில் அரை சதமெடுத்த ஹேண்ட்ஸ்காம்ப், சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பை உண்டு பண்ணினார். ஆனால் அவர் 61 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசிக்கட்டத்தில் ஸ்டாய்னிஸும் மேக்ஸ்வெல்லும் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் ஆஸி. அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் கிடைத்தன. ஸ்டாய்னிஸ் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் புவனேஸ்வர், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

பின்னர் 289 என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய வீரர்கள் களம் இறங்கினார் விராட் கோலி ரோஹித் சர்மா ஷிகர் தவான் மகேந்திர சிங் தோனி அம்பத்தி ராயுடு என நல்ல பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்த அணி அதனை எளிதாக எடுத்து விடும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர் வழக்கம்போல ஓரளவிற்கு சொதப்பிய சிகர் தனது முதல் ஓவரிலேயே கடைசி பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். • SHARE

  விவரம் காண

  கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை !!

  கரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..? மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து !!

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை !!

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...

  எதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா? மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!

  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...