நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது இந்த வெற்றியை தொடர்ந்து தோனியின் 36வது பிறந்த நாளை இந்திய வீரர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
ஒரு ஹோட்டலில் தோனியின் பிறந்த நாளை இந்திய வீரர்கள் கொண்டாடினார்கள், இந்திய வீரர்கள் பிறந்த நாள் பாடலை பாடி தோனியின் பெயரில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்திய வீரர்கள் தோனியின் பிறந்த நாளிற்கு முன்னாடியே அனைத்தையும் தயார் நிலையில் வைத்து இருந்து இருக்கிறார்கள் அதனால் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் 5வது ஆட்டம் முடிந்த உடன் தோனியின் பிறந்த நாளை கொண்டாட இந்திய வீரர்கள் தயாராகி விட்டார்கள்.
தோனிக்கு பரிசு அளிக்கும் வகையில் நேற்றைய போட்டியில் சதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை கொடுத்தார். ஆனால் உண்மையான கொண்டாட்டம் தோனியின் பிறந்த நாளில் ஹோட்டலில் தான் நடந்தது.
இந்திய வீரர்கள் தோனி பிறந்த நாளிற்க்கு கேக் வெட்டி கொண்டாடிய விடியோவை பாருங்கள் :
#பிறந்தநாள்_வாழ்த்துகள்_தலDHONI #HappyBirthdayMSD celebration video #Thala @msdhoni @hardikpandya7 ??????✌ @Raina_Barani @kanish_rana pic.twitter.com/zbnkQkIZwk
— Sarath Raina ♥️ (@Sarath_Raina) July 7, 2017
இந்த கொண்டாட்டத்தின் மூலம் இந்திய வீரர்கள் டோனியின் மீது எவ்வளவு மரியாதையும் பாசமும் வைத்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு புரியும்.
இலங்கை அணிக்கு எதிராக 183* ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தவர் தான் தோனி அன்று முதல் இன்றுவரை அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறார். முதல் முதல் 2007இல் நடந்த டி20 உலக கோப்பை போட்டிகளில் கேப்டன் ஆக பதவி ஏற்றார். அன்று முதல் இந்திய அணியின் வெற்றி கேப்டன் என பேர் பெற்ற இவர் உலகில் உள்ள அணைத்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பட்டமும் பெற்றார்.இந்த சாதனையை தோனியை தவிர வேற எந்த வீரரும் அடையவில்லை.
இவர் 2007இல் டி20 கேப்டனாக பதவி ஏற்றார் பதவி ஏற்ற முதல் தொடரிலேயே ஐசிசி டி20 கோப்பையை வென்றார் அதற்க்கு பிறகு இந்திய அணியை 2011 உலக கோப்பை போட்டிக்கு அழைத்து சென்றார் டி20 உலக கோப்பை தொடரை வென்ற பிறகு இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011இல் உலக கோப்பையை இந்திய அணிக்கு வாங்கி கொடுத்தார்.
அதற்கு பிறகு 2013இல் சாம்பியன் ட்ரோபி கோப்பையையும் இந்திய அணிக்கு வாங்கி கொடுத்தார் இதன் மூலம் அணைத்து ஐசிசி தொடர் கோப்பையை வென்று உள்ளார்.