முரளி விஜய் கொஞ்சம் பொருக்கட்டுமே : கவாஸ்கர் 1

கவாஸ்கர் :

இந்திய டெஸ்ட் அணியில்  முரளி விஜய் தனது வாய்பிற்காக சிறிது காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இலங்கை அணியை தனது சொந்த மண்ணில் மன்னை கவ்வ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முரளி விஜய் கொஞ்சம் பொருக்கட்டுமே : கவாஸ்கர் 2

இந்த தொடரில் முன்னதாக தொடக்க ஆட்டகாரராக முரளி விஜய் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் தனது மணிக்கட்டு காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதால் தொடரில் இருந்து வெளியேறினார். அதன் காரணமாகா அவருக்கு மாற்றாக இடது கை பேட்ஸ்மேன் சிகர் தவான் அழைக்கப்பட்டார்.

முதல் போட்டியில் ராகுல் காய்ச்சலால் பாதிக்கப்பட, அபினவ் முகுந்த் உடன் களம் கண்டார் சிகர் தவான். கொடுத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திய சிகர் தவான் இலங்கை பந்து வீச்சை சின்னா பின்ன மாக்கி 168 பந்துகளுக்கு 190 ரன்களை குவித்தார்.

முரளி விஜய் கொஞ்சம் பொருக்கட்டுமே : கவாஸ்கர் 3
India’s Shikhar Dhawan gestures towards team’s dressing room as he celebrates scoring a century during the first day’s play of their third cricket test match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

பின்னர் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய சிகர் தவான் 3 டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் மொத்தம் 358 ரன்கள் குவித்துள்ளார் அவர். அதன் சராசரி மட்டுமே 89.50 ஆகும்.

என்.டி.டிவி க்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்.

முரளி விஜய் இந்திய அணிக்கு விரைவில் திரும்புவார். ஆனால், சிகர் தவான் இந்த தொடரில் ஆடியதை பார்த்தால் முரளி விஜய் தனது வாய்பிற்காக சிறிது காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு அபாரமாக செயல்பட்டு வரும் ஒரு வீரரை அணியை விட்டு நீக்குவது கேப்டன் விராத் கோலிக்கு முடியாத ஒரு காரியம் ஆகும். ஆனால் அவருக்கு இங்கு தான் ஆரம்பம் தலைவலி.

ஏனெனில், மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் பல சாதனைகளை படைத்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து  அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.அவர் 8* அரை சதங்கள் தொடர்ந்து அடித்திருக்கிறார். மேலும் அவர் இளம் வீரர்.

இதனால் ராகுல் அணியின் ஆட்டோமெட்டிக் செல்வன். மற்றொரு தொடக்க வீரர் இடத்தில் ஆட நேரடியாகவும்ப மறைமுகமாகவும் பலர் உள்ளனர். அதில் முன்று பேர் அணியிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்பந்தத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அபினவ் முகுந்த், முரளி விஜய் மற்றும் சிகர் தவான்.

முரளி விஜய் கொஞ்சம் பொருக்கட்டுமே : கவாஸ்கர் 4

இவர்களில் ஒருவரே மற்றொரு தொடக்க இடத்தில் ஆட போவதாக தெரிகிறது. ஆனால் இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுதாக வேண்டும் விராத் கோலி. இப்போது நன்றாக ஆடி வரும் சிகர் தவான் அந்த இடத்தை நிரப்புவார்.

இதனால் முரளி விஜய் தனது வாய்பிற்காக சிறிது காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முரளி விஜய் கொஞ்சம் பொருக்கட்டுமே : கவாஸ்கர் 5

தற்போது காயத்தில் இருந்து மீண்டு டிஎன்பிஎல் ஆடிக்கொண்டிருக்கும் அவர், கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். அவர் ஆடிய இரு போட்டியில் தலா 69, 0 ரன்கள் எடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *