விஜய் ஹசாரே டிராபி; ஆந்திராவை அடித்து விரட்டி இறுதி போட்டிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா !! 1
விஜய் ஹசாரே டிராபி; ஆந்திராவை அடித்து விரட்டி இறுதி போட்டிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா

விஜய் ஹசாரே டிராபியில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆந்திரா அணியை வீழ்த்திய சவுராஷ்டிரா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் தங்களை நிரூபிக்கும் வீரர்களே ரஞ்சி கோப்பையில் இடம்பெறுவார், அதில் சோபிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுவார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டும். இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்து தரும் இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாக் அவுட் சுற்றுக்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஒரு அரையிறுதி போட்டியில் சவுராஷ்ரா அணி, ஆந்திராவை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ஆந்திரா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பரோட் (1), ஜானி (1), கேப்டன் புஜாரா (17) அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் தொடக்க வீரர் வியாஸ் (46), ரவீந்திர ஜடேஜா (56), வாசவடா (58), மங்கட் (40) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சவுராஷ்டிரா 49.1 ஓவரில்  255 ரன்கள் எடுத்து அல்அவுட் ஆனது.

விஜய் ஹசாரே டிராபி; ஆந்திராவை அடித்து விரட்டி இறுதி போட்டிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா !! 2

பின்னர் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆந்திரா அணி களம் இறங்கியது. சவுராஷ்டிரா அணியின் தர்மேந்திரசிங் ஜடேஜாவின் அபார பந்து வீச்சால் ஆந்தியா 45.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 196 ரன்னில் சுருண்டது. இதனால் சவுராஷ்டிரா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆந்திரா அணியின் சுமந்த், ரவி தேஜா தலா 42 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

வரும் 27-ந்தேதி சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *