VIRALVIDEO : கேமரூன் கிரீனின் இந்த அற்புதமான கேட்ச்சால் ரிஷப் பண்ட் 23 ரன்களுடன் வெளியேறினார் ! 1

VIRALVIDEO : கேமரூன் கிரீனின் இந்த அற்புதமான கேட்ச்சால் ரிஷப் பண்ட் 23 ரன்களுடன் வெளியேறினார் !

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

VIRALVIDEO : கேமரூன் கிரீனின் இந்த அற்புதமான கேட்ச்சால் ரிஷப் பண்ட் 23 ரன்களுடன் வெளியேறினார் ! 2

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர். இதில் லபுசாக்னே 108, பெய்ன் 50, கிரீன் 47 மற்றும் வேட் 45  ரன்கள் குவித்துள்ளனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 111.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ரன்கள் மட்டுமே குவித்தது.

VIRALVIDEO : கேமரூன் கிரீனின் இந்த அற்புதமான கேட்ச்சால் ரிஷப் பண்ட் 23 ரன்களுடன் வெளியேறினார் ! 3

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் முடிவில் 6 ஓவர்கள் மட்டும் வீசி 21 ரன்கள் குவித்தது. இதில் வார்னர் 20 ரன்களும் ஹாரிஸ் 1 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். இந்திய வீரர்கள் அனைவரும் மோசமான விளையாடி வருகையில் 6 விக்கெட் இழப்பிற்கு பின் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் நிதானமாக விளையாடி பாட்னர்சிப்பில் 123 ரன்கள் குவித்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது நாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் ரிஷப் பண்ட்டின் எதிர்பாராத கேட்சை பிடித்து அசத்தியுள்ளார்.

VIRALVIDEO : கேமரூன் கிரீனின் இந்த அற்புதமான கேட்ச்சால் ரிஷப் பண்ட் 23 ரன்களுடன் வெளியேறினார் ! 4

கடந்த டெஸ்டில் 97 ரன்கள் குவித்து தற்போது இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி வந்தார் ரிஷப் பண்ட். அப்போது ஆட்டத்தின் 66.2 வீசிய ஹாசில்வுட் பவுனசர் பந்தை வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட பண்ட் ஆஃப் சைடில் பந்தை தொட்டு விட்டார். இதை கேமரூன் கிரீன் பக்குவமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் பண்ட் 23 ரன்களுடன் வெளியேறினார். தற்போது கேமரூன் கிரீன் பிடித்த பண்ட்டின் கேட்ச் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *