வீடியோ : டாஸ் வென்றதையே மறந்துவிட்டு விலங்கி சென்ற விராட் கோலி ! 'டாஸ் வென்று எனக்கு பழக்கமில்லை' என்ற கோலி ! 1

வீடியோ : டாஸ் வென்றதையே மறந்துவிட்டு விலங்கி சென்ற விராட் கோலி ! ‘டாஸ் வென்று எனக்கு பழக்கமில்லை’ என்ற கோலி !

14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 15 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. 

இன்று(ஏப்.22) நடைபெறும் 16வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் மோதுகிறது. இந்த போட்டி மாலை 7.30 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

வீடியோ : டாஸ் வென்றதையே மறந்துவிட்டு விலங்கி சென்ற விராட் கோலி ! 'டாஸ் வென்று எனக்கு பழக்கமில்லை' என்ற கோலி ! 2

இதுவரை நடைபெற்ற ஐபிஎல்லில் பெங்களூர் அணி 3-0 என்ற கணக்கிலும், ராஜஸ்தான் அணி 1-2 என்ற கணக்கிலும் இருக்கிறது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 7வது இடத்தில் இருக்கிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளிலில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில் ராஜஸ்தான் 10 முறையும், பெங்களூர் 10 முறையும் வெற்றி பெற்று இரு அணிகளும் சமமாக தான் இருக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் நோ ரிசல்ட்டில் உள்ளது. எனவே, இன்றைய போட்டியின் மூலம் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கவும், ராஜஸ்தான் அணி தொடர்ந்து தோல்வி பெற்று வருவதால் இன்று வெற்றி பெறவும் முயற்சி செய்யும்.

வீடியோ : டாஸ் வென்றதையே மறந்துவிட்டு விலங்கி சென்ற விராட் கோலி ! 'டாஸ் வென்று எனக்கு பழக்கமில்லை' என்ற கோலி ! 3

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் தேர்வு செய்திருக்கிறார். இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு மாற்றங்களை செய்திருக்கிறது.

பெங்களூர் அணியில் ரஜத் பட்டிதருக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சனை சேர்ந்திருக்கிறது. அதேபோல் ராஸ்தான் அணியில் ஜெய்தேவ் உனட்கட் பதிலாக ஸ்ரேயஸ் கோபால் சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றபடி கடந்த போட்டியில் விளையாடிய அனைவரும் மீண்டும் இந்த போட்டியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில், டாஸ் வென்ற விராட் கோலி தான் டாஸ் வென்றதையே மறந்துவிட்டு சஞ்சு சாம்சனுக்கு பின்னால் நின்று விட்டார். அதன்பிறகு நியாபகம் வந்து ‘நான் தானே டாஸ் ஜெயிச்சேன். நான் பவுலிங் தேர்வு செய்கிறேன். டாஸ் வென்று எனக்கு பழக்கமில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *