வீடியோ : ப்ப்பா!!! என்ன ஒரு சிகஸ், வந்தவுடன் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த கோலி 1
during the One Day International match between Australia and India at Sydney Cricket Ground on January 26, 2015 in Sydney, Australia.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில் இன்று 7 மணிக்கு துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மனித்தது.

இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் அறிமுக போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டார். இந்திய அணிக்காக துவக்க ஆட்டகாரர்களாக ரோகித் சர்மா மற்றும் சிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினர்.

துவக்க முதலே அபாரமாக ஆடிய ரோகித், தவான் இணை நியூசிலானது அணி பந்து வீச்சாளர்களை நாளாபுறமும் பறக்கவிட்டது. தனது சின்ஃப்ஹ ஊரான டெல்லியில் தனது ஆதிக்கத்தைக் காட்டினார் சிகர் தவான். அடுத்த்டுத்து சிக்சர் மற்றும் ஃபோர்களாக பறக்கவிட்ட சிகர் தவான் 52 பந்துகளில் 80 ரன் குவித்தார். மற்றொரு புறம் தனது வழக்கமான ஷாட்டுகளால் ஜாலியாக ஆடிய ரோகித்தும் 80 ரன்கள் குவித்தார். இருவரும் சேர்ந்து 16 ஃபோர்களும் 6 சிக்சர்களும் பறக்கவிட்டனர்.

பின்னர் மூன்றாவது விக்கெட்டுகு வந்த ஹர்திக் பாண்டிய முதல் பந்திலேயே எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து இன்னும் இந்திய ஆட்டம் முடிய 15 பந்துகளே இருக்கும் நிலையில் வந்த விராட் கோலி, தனது முதல் பந்திலேயே காலின் டி க்ரான்ட்கோமின் பந்தை நின்றபடியே அற்புதமாக ஒரு சிக்சர் பறக்க விட்டு தனது ஆட்டத்தை துவக்கினார்.

அந்த சிக்சர் வீடியோ கீழே :

https://twitter.com/84107010ghwj/status/925736382458421253

 

பின்னர் தொடர்ந்து வந்த தோனியும் தன் பங்கிற்கு 2 பந்தில் 7 ரன் அடித்தார். இதிலும் ஒரு சிக்சர் அடங்கும், இறுதியாக விராட் கோலி 11 பந்துகளுக்கு 3 சிக்சர்களுடன் 26 ரன் அடிக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன் குவித்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *