இந்த விருது எனக்கு மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளது : விராட் கோலி 1
BIRMINGHAM, ENGLAND - JUNE 04: Virat Kohli, captain of India waits to lead his team out against Pakistan ahead of the ICC CHampions Trophy match between India and Pakistan at Edgbaston on June 4, 2017 in Birmingham, England. (Photo by Matthew Lewis-IDI/IDI via Getty Images)

 

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய கவுரவம் என விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐசிசியின் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருது அளிக்கப்படுகிறது.இந்த விருது எனக்கு மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளது : விராட் கோலி 2 ஐசிசியின் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்தாண்டு 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 1,460 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள், 7 அரை சதங்கள் அடங்கும். இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து  தோனி விலகியதையடுத்து கோலி மூன்று விதமாக கிரிக்கெட் போட்டிக்கும் தலைமை தாங்கி அணியை வழிநடத்தி வருகிறார்.

ஐசிசியின்  2017ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது எனக்கு மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளது : விராட் கோலி 3

2017ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் அவர் தேர்வாகியுள்ளார்.  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கடந்த ஆண்டில் மட்டும் ஒருநாள்‌ போட்டிகளில் 1460 ரன்கள் குவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய கவுரவம், அதுவும் தொடர்ச்சியாக இருமுறை இந்திய வீரர்கள் இந்த விருதினைப் பெறுவது கூடுதல் சிறப்பு என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த முறை உலகின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதினை வென்றிருந்தார்.

Leave a comment

Your email address will not be published.