விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது ! 1

கோலி – அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது ! 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருப்பதை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

2017 டிசம்பரில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அனுஷ்கா சர்மா பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப் பயணத் தொடரையும் பாதியிலேயே விட்டுவிட்டு தற்போது தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரம் செலவிட்டார்.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது ! 2

அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விராட் கோலியை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் “நாங்கள் இந்த நல்ல செய்தியை தெறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அனுஷ்கா சர்மா மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருக்கிறார்கள். புத்தம் புதிய வாழ்க்கையை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தருணத்தில் எங்களது பிரைவஷிக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறோம்” என்று டிவிட் செய்திருந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், பாலிவுட் நடிகை நடிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

 இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில்  இருந்து பாதியிலேயே வெளியேறினார். விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி இந்தியா திரும்பினார்.  ஆனால் விராட் கோலி  இந்த திடீர் முடிவிற்கான விளக்கத்தை கூறிவிட்டு தான் சென்றார். நான் எனது மனைவி அனுஷ்கா சர்மாவின் கர்ப்ப காலத்தில் உடன் இருக்க வேண்டுமென்று தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று விராட் கோலி தெளிவாக விளக்கமளித்தார். இதனால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் அஜின்கியா ரஹானே கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *