Cricket, India, Sri Lanka, Virat Kohli, Ravindra Jadeja, Cheteshwar Pujara, Ajinkya Rahane

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 900 புள்ளிகள் பெற்ற ஒரே இந்தியர் சுனில் கவாஸ்கர். சச்சின், டிராவிடால் கூட அந்த இலக்கை எட்டமுடியாமல் போனது. இந்நிலையில் கவாஸ்கருக்கு அடுத்ததாக 900 புள்ளிகளைத் தாண்டிய 2-வது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

சச்சின், டிராவிட் ஆகியோரை முந்தி விராட்கோலி சாதனை!!! 1
Indian cricketer Virat Kohli (C) and teammates celebrate the dismissal of South African batsman AB de Villiers (not in picture) during the first day of the second Test cricket match between South Africa and India at Supersport cricket ground on January 13, 2018 in Centurion. / AFP PHOTO / GIANLUIGI GUERCIA (Photo credit should read GIANLUIGI GUERCIA/AFP/Getty Images)

கவாஸ்கர் தனது 50-வது டெஸ்டில் 887 புள்ளிகள் முதல் 916 புள்ளிகளுக்குத் தாவினார். சச்சின் 2002-ல் 898 புள்ளிகளும் டிராவிட் 2005-ல் 892 புள்ளிகளும் பெற்றார்கள். அதுவே அவர்கள் எடுத்த உச்சபட்ச டெஸ்ட் தரவரிசைப் புள்ளிகள். இந்நிலையில் செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் சதமெடுத்த கோலி இந்த இலக்கை எட்டியுள்ளார்.

இந்திய வீர்ரகள் இதுவரை எடுத்துள்ள அதிகபட்ச புள்ளிகள் :

  1. சுனில் கவாஸ்கர் – 916
  2. விராட் கோலி – 900
  3. சச்சின் டெண்டுல்கர் – 898
  4. ராகுல் டிராவிட் – 892
  5. செடேஸ்வர் புஜரா – 888
  6. கௌதம் கம்பிர் – 886
  7. குண்டப்பா விஸ்வநாத் – 871
  8. விஜய் ஹசாரே – 866
  9. விரேந்தர் சேவாக் – 866
  10. திலீப் வெங்காசர்கார் – 837

900 புள்ளிகளை அடைந்த 31-வது டெஸ்ட் வீரர் கோலி. இதுவரை டெஸ்ட் தரவரிசையில் அதிகப் புள்ளிகள் பெற்றவர் பிராட்மேன். அவர் எடுத்த 961 புள்ளிகளை இதுவரை யாராலும் நெருங்கமுடியவில்லை. சமீபத்தில் ஆஸி. கேப்டன் 947 புள்ளிகள் பெற்றார்.

சச்சின், டிராவிட் ஆகியோரை முந்தி விராட்கோலி சாதனை!!! 2
Cricket – India v South Africa – First Test cricket match – Newlands Stadium, Cape Town, South Africa – January 8, 2018. India’s captain Virat Kohli makes a run. REUTERS/Sumaya Hisham

செஞ்சுரியன் டெஸ்ட் சதம் மூலம் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார் கோலி. முதல் இடத்தில் ஸ்மித் உள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published.