தோனியின் சாதனையை தகர்த்தெறிந்த விராட் கோஹ்லி !! 1

தோனியின் சாதனையை தகர்த்தெறிந்த விராட் கோஹ்லி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக வலம்வரும் இந்திய அணி, தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவருகிறது.

விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவிப்பதுடன் பல சாதனைகளை நிகழ்த்தி புதிய மைல்கற்களை எட்டிவருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி, அதன்பின்னர் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவருகிறது.

தோனியின் சாதனையை தகர்த்தெறிந்த விராட் கோஹ்லி !! 2

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தொடரான வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில், வெஸ்ட் இண்டீஸின் சொந்த மண்ணில் அந்த அணியை 2-0 என ஒயிட்வாஷ் செய்து 120 புள்ளிகளை பெற்ற இந்திய அணி, இந்தியாவிற்கு வந்த தென்னாப்பிரிக்காவை 3-0 என ஒயிட்வாஷ் செய்து, அதிலும் 120 புள்ளிகளை பெற்றது.

இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று 300 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

தோனியின் சாதனையை தகர்த்தெறிந்த விராட் கோஹ்லி !! 3

 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி 10 இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் தோனியின்(9 இன்னிங்ஸ் வெற்றிகள்) சாதனையை முறியடித்து வெற்றிகரமான கேப்டனாக வலம்வருகிறார் கோலி. அசாருதீன் கேப்டன்சியில் இந்திய அணி 8 இன்னிங்ஸ் வெற்றிகளையும் கங்குலி தலைமையில் இந்திய அணி 7 இன்னிங்ஸ் வெற்றிகளையும் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் இன்னிங்ஸ் வெற்றி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, வங்கதேசத்தையும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *