Cricket, India, Sri Lanka, Virat Kohli, Kuldeep Yadav

டி20 சேசிங்கில் அதிகன் ரன், விராட் சாதனை

விராத் கோலி தனது பேட்டிங்க் மற்றும் கேப்டன்சிப்பல் அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்து வருகிறார். தற்போது நடந்து முடிந்த இலங்கை தொடரில் டி20 போட்டியில் 82 ரன் விளாசி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

அதிலும் ஒரு சாதானை படைத்துள்ளார் கோலி, அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் சேசிங்கில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையப் படைத்துள்ளார்.

முன்னர் ஓய்வுபெற்ற நியுசிலாந்தின் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் 1006 ரன் அடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது கோலி அவரது சாதனையைத் தகர்ஹ்ட்து முதலிடம் பிடித்துள்ளார்.

அது பொக சேசிங்கில் 1000 ரன் எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவருகு கிடைத்துள்ளது.

அந்த பட்டியல் கீழே :

 

டி20 சேசிங்கில் அதிகன் ரன், விராட் சாதனை 1

சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியல் :

டி20 சேசிங்கில் அதிகன் ரன், விராட் சாதனை 2

அதிவேக 15000 சர்வதேச ரன், கோலி சாதனை

சர்வதேச கிரிகெட்டில், அதிவேக மாக 15 ஆயிரம் ரன்களைக் கடந்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சாதனை படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ரன்களைக் கடந்தபோது இந்த சாதனையை அவர் எட்டினார்.

3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து, 304ஆவது ஆட்டத்தில் கோலி, 15 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். தென்னாப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா, 336 போட்டிகளில் 15ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது.

டி20 சேசிங்கில் அதிகன் ரன், விராட் சாதனை 3

 

அடுத்தடுத்த மகுடம் :

தற்போது தான் கோலி , அதிவேகமாக 30 சதங்களை கடந்தவர் என்னும் சாதனையைப் படைத்தார்.

இலங்கயுடனான, 5வது ஒரு நாள் போட்டியின் போது இந்த சாதனையைப் படைத்தார். தற்போது ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்ட்டிங்கின் சாதனையை தகர்த்துள்ளார்.

 அதிவேகமாக குறைந்த இன்னின்சில் 30 சதம் கண்டவர்கள் பட்டியளிலும் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

அதிவேக

இதற்க்கு முன்னர், சச்சின் 266 இன்னிங்சில் 30 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராத் கோலி 194 இன்னிங்சில் 30 சதத்தை எட்டி சாதனை படைத்துள்ளார்.

மேலும், டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து 8 தொடர்களை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கோலி.

100 ரன்
India’s Virat Kohli reacts after scoring his century during their fourth one-day international cricket match against South Africa in Chennai, India, October 22, 2015. REUTERS/Danish Siddiqui – RTS5M1U

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 9 ஆட்டங்களிலும் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி20 போட்டி) தோல்வியை சந்திக்காமல் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.

ஒரு தொடரில் மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி 2010-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இதே போன்று (9-0)   வெற்றி கண்டிருந்தது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *