ஒரு சதம் போதும்; புதிய சரித்திரம் படைக்க காத்துள்ளார் விராட் கோலி !! 1

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம், இந்திய கேப்டனான விராட் கோலி புதிய சாதனை ஒன்றையும் படைக்க காத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதே போல் மறுபுறம் இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ஒரு சதம் போதும்; புதிய சரித்திரம் படைக்க காத்துள்ளார் விராட் கோலி !! 2

இந்தநிலையில் இங்கிலாந்து அணியுடனான இந்த போட்டியின் மூலம், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காராகியுள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டியில் விராட் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில், சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் முன்னால் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடத்தை பிடிப்பார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 41 சதங்கள் அடித்துள்ளார், விராட் கோலியும் இதுவரை 41 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ளார். ஒரு சதம் அடித்தால் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டுவார்.

ஒரு சதம் போதும்; புதிய சரித்திரம் படைக்க காத்துள்ளார் விராட் கோலி !! 3

அதே போல் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார்.

2வது டெஸ்ட்டில் இந்திய அணி பெற்ற வெற்றி, விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய மண்ணில் இந்திய அணி பெற்ற 21வது டெஸ்ட் வெற்றி. அதன்மூலம் இந்திய மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை சமன் செய்தார் கோலி. எனவே வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால், இந்திய மண்ணில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை(22) பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைப்பார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *