யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்..? மவுனம் கலைத்த விராட் கோலி !! 1

தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் யுஸ்வேந்திர சாஹலுக்கு டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ளார்.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 17ம் தேதி துவங்குகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 18ம் தேதி நடைபெறும் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியையும், 20ம் தேதி நடைபெறும் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது. அதே போல் 24ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்..? மவுனம் கலைத்த விராட் கோலி !! 2

டி.20 உலகக்கோப்பை நாளை துவங்குவதால் கேப்டன்களுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடத்தப்பட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலியும் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு ஓபனாக பதிலளித்தார். இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்..? தோனியின் பங்கு என்னவாக இருக்கும்..? உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய கோலி, டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலுக்கு இடம் கிடைக்காதது ஏன் என்ற காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்..? மவுனம் கலைத்த விராட் கோலி !! 3

இது குறித்து விராட் கோலி பேசுகையில், “சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை அணியில் எடுத்தது சவாலான முடிவு. ராகுல் சாஹர் கடந்த இரண்டு வருடமாகவே மிக சிறப்பாக பந்துவீசி வருகிறார். ராகுல் சாஹர் சுழற்பந்து வீச்சாளர் என்றாலும் அவரது பந்தில் வேகமும் உள்ளது, இதுவே அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கான மிக முக்கிய காரணம். அதே போல் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களிலும் ராகுல் சாஹர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இக்கட்டான ஓவர்களை வீசுவதற்கு ராகுல் சாஹர் சிறப்பான தேர்வாக இருப்பார். ராகுல் சாஹர் லெக் ஸ்பின்னராகவும், வேகமாக பந்துவீச கூடியவராகவும் இருப்பதும் அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. எங்களுக்கும் இது போன்ற ஒருவர் அணிக்கு தேவைப்பட்டது. ராகுல் சாஹரை போன்ற வீரர்களால் தான் எதிரணி பேட்ஸ்மேன்களை ஈசியாக கட்டுப்படுத்தி விக்கெட்டும் வீழ்த்த முடியும். உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல, நாம் நினைத்த அனைவருக்கும் அணியில் இடம் கொடுத்துவிட முடியாது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *