Cricket - England v India - Third One Day International - Emerald Headingley, Headingley, Britain - July 17, 2018 India’s Virat Kohli in action Action Images via Reuters/Ed Sykes

சிட்னியில் நடக்கும் முதல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக, 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்த நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ் ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னி யில் இன்று நடக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக, அணியில் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் வீரர்கள் செயல்படுவார்கள் என்பதால் ஒவ்வொரு வீரரும் முழு திறமையுடன் இதில் விளையாடுவார்கள்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் ஆசிய அணி என்ற பெருமை பெற்ற இந்திய அணி, மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு நாள் போட்டியில் களம் இறங்குறது. ஒரு நாள் அணிக்கான வீரர்கள், தவான், கேதர் ஜாதவ், ராயுடு, தோனி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், தவானும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால், நமது அணி சவாலான ஸ்கோரை எட்டும்.

விக்கெட் கீப்பர் தோனி, தான் பங்கேற்ற கடந்த 20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவரது இடத்துக்குப் பலத்த போட்டிகள் இருப்பதால், இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

டெஸ்ட் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஸ்மித், வார்னர் நீக்கத்துக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி எந்த சர்வதேச தொடரையும் வென்றதில்லை. கடைசியாக ஆடிய 24 ஒரு நாள் போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த தொடரை வெல்ல அந்த அணி, கடுமையாகப் போராடும்.

நிர்யணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.

இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

தொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபியூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர்



  • SHARE

    விவரம் காண

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

    தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

    தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

    பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

    பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...

    தோனியை பாராட்டிய பிராக் லெஸ்னரின் மேனேஜர்!!

    Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat  செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட்...

    உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி

    உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த தோனி...