தாடிக்கு இன்சூரன்ஸ் செய்த விராத் கோலி- வீடியோ லீக்டு 1

சமீபகாலமாக கழுத்து வலியில் அவதிப்பட்டு வந்த இந்திய கேப்டன் விராத் கோலி, தற்போது குணமடைந்து வருகிறார். இதனால் வருகின்ற ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகினார். ஓய்வில் இருந்தபோதும், இவர் எதேனு ஒரு விதத்தில் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறார்.

தாடிக்கு இன்சூரன்ஸ் செய்த விராத் கோலி- வீடியோ லீக்டு 2

சற்றுமுன்பு, விராட் கையெழுத்து இடுவது போன்று ஒரு சிசிடிவி வீடியோ பதிவு வெளியாகியது. இது ட்விட்டரில் அதிகமாக பகிறப்பட்டு வருகிறது.

விராட் கோலி தனது பேஷனில் அதிக கவனம் செலுத்தி வருபவர். தனக்கென தனி ஆடை வடிவமைப்பாளரை வைத்துள்ளார். முன்னணி ஆடை பிராண்ட் சொந்தமாக வைத்துள்ளார்.

தாடிக்கு இன்சூரன்ஸ் செய்த விராத் கோலி- வீடியோ லீக்டு 3

தற்போது வெளியான வீடியோ பதிவில், தன் தாடிக்காக இன்சூரன்ஸ் செய்துள்ளார் என அனைவராலும் பேசப்படுகிறது. இதுகுறித்து கோலி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

ட்விட்டர் பரவல்

தாடிக்கு இன்சூரன்ஸ் செய்த விராத் கோலி- வீடியோ லீக்டு 4

இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் கேஎல் ராகுல் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். கோலி தன் தாடியின் மீது எப்போதும் தனி கவனம் செலுத்துவார்.

இந்த வீடியோவில், கோலி அருகில் உள்ளவர்கள் அவரது முகத்தையும் தாடியையும் புகைப்படம் எடுத்துத போன்று பதிவாகியுள்ளது. இதெல்லாம் வைத்து பார்க்கும் போழுது மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுதிட்டுள்ளார் என தெரிகிறது.

ட்விட்டர் ரசிகர்கள் இந்த விஷயம் தெரிந்த உடன் #ViratInsuresBeard என்ற ஹாஸ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றன. வீடியோ வெளிவந்த சில நேரத்திலேயே பல்லாயிர கணக்கான ட்விட்கள் இதுகுறித்து பதிவிடப்பட்டது.

சிலர் இதை பெருமையாகவும், வெகு சிலர் இதுகுறித்து கிண்டலாகவும் பேசியுள்ளனர். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க விராட் கோலியின் பதிலே தேவை.

விராட் கோலி இதுகுறித்து விரைவில் பேசுவார் என எதிர்பார்க்க படுகிறது. நிச்சயம் பேசித்தான் ஆக வேண்டும். இல்லையெனில், வேறு கட்டுக்கதைகள் கூட இதற்கு கூறப்படும்.

இதுகுறித்து சில ட்விட்டுக்கள்…

https://twitter.com/gyanibaba7/status/1005055808327987202?s=20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *