சர்ச்சைப் பேச்சு... ஒப்பந்தத்தில் கை வைக்கப் போகும் பிசிசிஐ 1

விராட் கோலி என்றாலே சென்சேஷன் தான். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்து சச்சினுக்கு டஃப் பைட் கொடுத்து வருகிறார். நிகழ் காலத்தின் டாப் கிரிக்கெட் மாஸ்டர் விராட் கோலி என்றால், அது மிகையல்ல.

அப்படிப்பட்ட சென்சேஷன் கோலி, இப்போது, ரசிகர் ஓருவருக்கு காட்டமாக பதில் சொல்லியிருப்பது மூலம், இம்முறை தனது பேச்சால் கிரிக்கெட் பக்கங்களை பரபரப்பாக்கி உள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி தான் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசுகையில், “ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் அப்படி ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை விரும்பிப் பார்க்கிறேன் என்று அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.சர்ச்சைப் பேச்சு... ஒப்பந்தத்தில் கை வைக்கப் போகும் பிசிசிஐ 2

இதற்கு என்னுடைய பதில் என்னவெனில், இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம், வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்?. நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்புகிற நீங்கள், இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள்” என்று விராட் கோலி அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய பிறந்த நாளன்று இணையதளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விராட்கோலியின் பேட்டிங்கை விட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட் செய்வது தான் எனக்கு பிடிக்கும் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு காட்டமாக பதிலளித்த விராட் கோலி, இந்த கருத்தை கூறிய ரசிகர் இந்தியாவில் வசிப்பதை விட, நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்கலாம் என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் கோலி கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி கூறுகையில்,சர்ச்சைப் பேச்சு... ஒப்பந்தத்தில் கை வைக்கப் போகும் பிசிசிஐ 3

‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன். அதோடு விவியன் ரிச்சட்ஸ், கிரீனிட்ஸ், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே மார்க் வாஹ், பிரையன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராட் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், பூமா போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழ்ச்சி அடையும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப்பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோலி மீறியிருக்கிறார். விராட் சிறந்த வீரர், சிறந்த மனிதராகவும் மாற முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *