இத்தொடரில் டிராவிட் சாதனையை முறியடிப்பாரா கோஹ்லி?? 1

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் கோஹ்லி நான்காவது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் டிராவிட் வெறும் 312 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் விராத் கோஹ்லி முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

இதில், ரோஹித் சர்மா விக்கெட்டை பாதுகாத்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி சற்று துரிதமாக ரன் குவித்தார். இதனால், இந்திய அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்த கோலி ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா37 ரன்களுக்கும், அம்பதி ராயுடு 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது.

இத்தொடரில் டிராவிட் சாதனையை முறியடிப்பாரா கோஹ்லி?? 2

இந்த நிலையில், தோனியுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை பாதுகாத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேசமயம், அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டையும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினர். சிறப்பாக விளையாடிய ஜாதவ் முதலில் அரைசதத்தை கடந்தார். அவரைத் தொடர்ந்து தோனியும் அரைசதத்தை கடந்தார்.

இதன்மூலம், இந்திய அணி 48.2 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் 81 ரன் அடித்த கேது ஜாதகருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

விராத் கோஹ்லி முறியடிப்பாரா??

இத்தொடரில் டிராவிட் சாதனையை முறியடிப்பாரா கோஹ்லி?? 3

ஒருநாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் ஆடி வரும் கேப்டன் கோஹ்லி 2011 ஆம் ஆண்டிலிருந்து தவிர்க்க முடியாத ஓருவராக இந்திய அணியில் வளம் வருகிறார் என்றால் அதற்க்கு அவரின் அற்புதமான பங்களிப்பு தான் காரணம்.

பல முறை சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதும், ஒரு காலண்டர் வருடந்தில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையும் பெற்றார். அவர் சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த 10வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். இந்திய கிரிக்கெட் அளவில் 4வது வீரர் ஆவார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் எடுத்ததன் மூலம் 10,577 ரன்களை பெற்றார். அவருக்கு முன்னதாக 10,889 ரன்களுடன் டிராவிட் முன்னிலையில் உள்ளார். வெறும் 312 ரன்கள் மட்டுமே தேவை. இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில் கோஹ்லி எளிதாக முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் டிராவிட் சாதனையை முறியடிப்பாரா கோஹ்லி?? 4

முதல் இரண்டு இடங்களில், சச்சின் டெண்டுல்கர் – 18426, சவ்ரவ் கங்குலி – 11,363 இருவரும் உள்ளனர்.

உலக அளவில் சச்சின் முதல் இடத்திலும், சங்கக்காரா மற்றும் பாண்டிங் இரண்டாவது மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *