ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த டெஸ்டில் நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகிறேன். ஆஸ்திரேலிய அணி எங்களைவிட பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. இந்த ஆடுகளத்தில் இது அதிகமான ரன்னே. ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணியே.அஸ்வின் உடற்தகுதி பெற்றிருந்தாலும் அவர் பெர்த்தில் ஆடியிருக்க மாட்டார், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது பிட்சைப் பார்த்து முடிவெடுக்கப்பட்ட விஷயம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி பெர்த் தோல்விக்குப் பிறகு விளக்கம் அளித்துள்ளார்.

அதிவேக பிட்சில் ஆஸி. ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன் ஆட்ட நாயகன் விருது பெற்றிருக்கும் நிலையில் ஜடேஜாவை எடுத்திருக்க வேண்டும், உமேஷ் யாதவுக்கு பதில் புவனேஷ்வர் குமாரை எடுத்திருக்க வேண்டும் என்று பலரும் கூறிவரும் நிலையில் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை அளித்துள்ளார்.

ஆடுகளத்தை பார்த்து 4 வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்தோம்: விராட் கோலி!! 1

“4 வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது பிட்சைப் பார்த்து முடிவு செய்யப்பட்ட விஷயம்.  நேதன் லயனுக்கு பிட்சில் உள்ள ரஃப் பெரிதாக உதவவில்லை. லயன் பந்துகளை வீசிய வேகத்தின் அளவு அவருக்கு விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்தது.

இந்தப் பிட்சில் ஸ்பின் அவசியம் என்று ஓர் அணியாக நாங்கள் கருதவில்லை.  பிட்சைப் பார்த்தோம் முதல் 3 நாட்களுக்கு அது வேகப்பந்துக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று கணித்தோம் அப்படித்தான் ஆனது.  கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் அணிக்கு ஆக்கபூர்வமாக அமையும் என்று எண்ணினோம்.

புவனேஷ்வர் குமார் சமீபத்தில் நிறைய 4 நாள் போட்டிகளில் ஆடவில்லை. உமேஷ் யாதவ் மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் உமேஷ் நல்ல பவுலிங் ரிதமில் இருந்தார். அதனால்தான் புவிக்கு பதில் உமேஷைத் தேர்வு செய்தோம்.ஆடுகளத்தை பார்த்து 4 வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்தோம்: விராட் கோலி!! 2

இரண்டே இரண்டு சூழ்நிலைகளைத்தான் நாம் சிந்திக்க முடியும். இன்னொரு கூடுதல் வேகப்பந்து பவுலர் எனும்போது அஸ்வின், ஜடேஜா பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்வார்கள் என்று தோன்றும். அஸ்வின், ஜடேஜா பேட்டிங் பங்களிப்பு பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.  ஆனால் எந்த முடிவாக இருந்தாலும் அது தந்திரோபாயமானதுதான். வேகப்பந்து வீச்சா அல்லது ஸ்பின்னுடன் அவரது பேட்டிங்கையும் நம்பி எடுப்பதா என்பது ஒருமாதிரியான இரண்டகச் சூழ்நிலைதான்.

அதனால்தான் வருவது வரட்டும் என்று 4 வேகப்பந்து பவுலர்களைக் கொண்டு களமிறங்கினோம்.  இந்த முடிவை வலுவாக ஆதரித்து அதைக் கடைப்பிடிக்க உறுதி பூண்டோம்.  இது பலனளித்ததா இல்லையா என்பது வேறு ஒரு கேள்வி.  பந்து வீச்சில் பிரச்சினையல்ல பேட்ஸ்மென்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.ஆடுகளத்தை பார்த்து 4 வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்தோம்: விராட் கோலி!! 3

டெஸ்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நிறைய விஷயங்கள் நடக்கும் ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் தான் நாம் தெளிவாகச் சிந்திக்க முடியும். ஒரு அணியாக இந்த அணிதான், இதோடுதான் ஆட வேண்டும் என்று முடிவெடுத்தே இறங்கினோம்.

நேற்று முதல் செஷனில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் 56 ரன்களைத்தான் கொடுத்தோம்.  பந்து வீச்சாளர்கள் நன்றாகவே வீசினர், வேகமாகத் துல்லியமாக வீசினர் ஆகவே பவுலர்கள் மீது குறை கூற முடியாது” என்றார் விராட் கோலி. • SHARE

  விவரம் காண

  ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்!

  தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன்,...

  வேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்! வச்சு செய்த நெட்டிசன்கள்!

  உமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே தோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது?’ என்று கேட்டு...

  அணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்! காரணம் இதுதான்!

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில்...

  அன்று விராட் கோலியுடன் பேசியது என்ன? மனம் திறந்த கேன் வில்லியம்சன்!

  கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி...

  இதே தேதி… இதே மைதானம்! 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்!

  பிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை...