மீண்டும் வலைபயிற்சியில் விராட் கோஹ்லி; மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள் !! 1
மீண்டும் வலைபயிற்சியில் விராட் கோஹ்லி; மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள்

கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி காயத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோஹ்லிக்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணியுடனான போட்டியின் போது கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

மீண்டும் வலைபயிற்சியில் விராட் கோஹ்லி; மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள் !! 2
India Cricket team skipper, Virat Kohli has begun his net training for the first time after he suffered a neck injury during the 51st match of the recently concluded Indian Premier League (IPL).

விராட் கோஹ்லிக்கு கழுத்தில் ஏற்பட்ட காயத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் அவர் நிச்சயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், விராட் கோஹ்லி கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகினார், இதனால் இவர் கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாட முடியாமல் போனது.

இது தவிர விரா கோஹ்லி விரைவில் குணமடைந்து ஜூன் 15ம் தேதி பெங்களூரில் உள்ள என்.சி.ஏ வில் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ., அறிவித்திருந்தது.

மீண்டும் வலைபயிற்சியில் விராட் கோஹ்லி; மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள் !! 3

இந்நிலையில் நேற்ற மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பெசிலிடியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டார். தற்போது இலேசான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வார்.

இரண்டு வார பயிற்சிக்குப்பின் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் தேசிய அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பார். அதன்பின் இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *