இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 1

இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து

ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் சிறந்த வீரர் என முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக விளையாடியவர் வாசிம் ஜாபர். தொடக்க காலத்தில் மிகச் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பட்டார். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதில் இருந்து ஓய்வை அறிவிக்கும் வரையிலும் வாசிம் ஜாபர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்திருந்தாலும் கடைசி வரை அவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கவே இல்லை.

இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 2

ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையுடன் விடைபெற்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சியாளராக அவதாரம் எடுத்துள்ள வாசிம் ஜாபர், கடந்த சில தினங்களாவே கிரிக்கெட் நிகழ்வுகள் மற்றும் வீரர்கள் குறித்தான தனது கருத்தை ஓபனாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒயிட் பால் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் சிறந்த வீரர் என ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 3

விராட் கோலி 248 ஒருநாள் போட்டிகளில் 11 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். சராசரி 60-ஐ தொட்டுள்ளது. 43 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 463 போட்டிகளில் 18,426 ரன்கள் அடித்துள்ளார். 490 சதங்கள் அடங்கும். சராசரி 44.83. இதை குறிப்பிட்டு வாசிம் ஜாபர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *