அடுத்த 10 வருடத்திற்கு நீங்கள் இதனை செய்யக்கூடாது சஞ்சு சாம்சனுக்கு கட்டளையிட்ட விராட் கோலி 1

சஞ்சு சாம்சன் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருக்கிறார் தோனிக்கு அடுத்து யார் விக்கெட் கீப்பராக இருக்க போகிறார் என்ற ஒரு இடத்திற்கு வரும் தகுதியானவர் தான் அதிலும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அற்புதமாக ஆடி வருகிறார் தொடர்ந்து 2010 தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவருக்கு தற்போது 25 வயதாகிறது கடந்த ஆறு வருடங்களாக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து நன்றாக விளையாடி வருகிறார்

Here's why 'helpless' Indian selectors excluded Sanju Samson for West  Indies series

இந்நிலையில் இந்த வருடம் எப்படியும் இவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து தனக்கான இடத்தை நிரப்பிக் கொள்வார் என்று தெரியவந்துள்ளது இதனை உறுதிப்படுத்தும் விதமாக விராட் கோலி சஞ்சு சாம்சனை அழைத்து பேசியிருக்கிறார் இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறியதாவது… அடுத்த பத்து வருடங்களுக்கு நீங்கள் கேரளாவில் கிடைக்கும் உங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிடாதீர்கள். இந்த பத்து வருடம் மட்டும் இதனை செய்யுங்கள் பத்து வருடத்திற்கு பின்னர் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் கிரிக்கெட் உங்களை வரவேற்க தயாராக இருக்கிறதுஅடுத்த 10 வருடத்திற்கு நீங்கள் இதனை செய்யக்கூடாது சஞ்சு சாம்சனுக்கு கட்டளையிட்ட விராட் கோலி 2

அதற்காக உங்களிடம் இருக்கும் அனைத்தையும் கிரிக்கெட்டிற்கு கொடுங்கள் என்று விராட் கோலி பேசினார். மேலும் அவர் என்னிடம் பேசியது என்னுடைய கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பை எனக்கு கற்றுக் கொடுத்து விட்டார் விராட் கோலி. நான் ஏற்கனவேயே அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறேன், விராட் கோலி இன்னும் அதனை மெருகேற்றி விட்டார் என்று கூறியிருக்கிறார் சஞ்சு சாம்சன்

இந்த வருட ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் தற்போது வரை இரண்டு ஆட்டத்தில் விளையாடி 159 ரன்கள் குவித்திருக்கிறார். முதலில் 32 பந்துகளில் 74 ரன் அடித்த சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *