விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த கேப்டன் கோஹ்லி!! 1
MOUNT MAUNGANUI, NEW ZEALAND - JANUARY 26: Virat Kohli of India leads his team off after winning game two of the One Day International Series between New Zealand and India at Bay Oval on January 26, 2019 in Mount Maunganui, New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கேப்டன் பொறுப்பில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்தார் கேப்டன் கோஹ்லி.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம், 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ஷிகர் தவான் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து இந்திய அணிக்கு மோசமான துவக்கத்தை அளித்தார். அதன்பிறகு, ரோஹித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இதில், ரோஹித் சர்மா விக்கெட்டை பாதுகாத்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி சற்று துரிதமாக ரன் குவித்தார். இதனால், இந்திய அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்த கோலி ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா37 ரன்களுக்கும், அம்பதி ராயுடு 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது.

விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த கேப்டன் கோஹ்லி!! 2

இந்த நிலையில், தோனியுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை பாதுகாத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேசமயம், அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டையும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினர். சிறப்பாக விளையாடிய ஜாதவ் முதலில் அரைசதத்தை கடந்தார். அவரைத் தொடர்ந்து தோனியும் அரைசதத்தை கடந்தார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த கேப்டன் கோஹ்லி!! 3

இதன்மூலம், இந்திய அணி 48.2 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜாதவ் 81 ரன்களும், தோனி 59 ரன்களும் எடுத்தனர்.

வெற்றிக்கு வித்திட்ட ஜாதவ் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இருஅணிகளுக்கிடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி நாக்பூரில் வரும் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த கேப்டன் கோஹ்லி!! 4

இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், 64 ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்துள்ள கோஹ்லி 48 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார். இதற்க்கு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் முதல் 64 ஒருநாள் போட்டிகளில் 47 வெற்றிகளை பெற்றுத்தந்ததே அதிகபட்சமாக இருந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *