அவனுக இல்லாம விளையாடுறது கொஞ்சம் கஷ்டம் தான்; விராட் கோஹ்லி வேதனை !! 1

பிரபலங்கள் பங்கேற்கும் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டா் ஹா்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து வரம்பு மீறி பேசியுள்ளார்.

இது பெரும் சா்ச்சையாக வெடித்தது. தவிர, சச்சின், விராட் கோலி இவா்களில் யாா் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு இருவரும் விராட் கோலி என பதில் அளித்தனா்

இதனால் ஆத்திரமடைந்த ரசிகா்கள், சச்சின், தோனியை விட கோலி பெஸ்ட் இல்லை என டுவிட்டரில் பாண்டியாவுக்கு எதிரான கருத்துகளை தொிவித்து வந்தனா்

அவனுக இல்லாம விளையாடுறது கொஞ்சம் கஷ்டம் தான்; விராட் கோஹ்லி வேதனை !! 2

 

இதனால் ஹா்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பாண்டியா வெளியிட்ட பதிவில், “யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை. யாரையாவது காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்என குறிப்பிட்டிருந்தாா்

இந்நிலையில் சா்ச்சைக்குரிய கருத்துக் குறித்து ஹா்திக் பாண்டியாவும், அவருடன் சென்ற கே.எல்.ராகுலும் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது, அப்போது ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் குறித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கோலி, இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை முறையற்ற கருத்துகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் எனவும் அதை இருவரிடமும் தெளிவுபடுத்தி விட்டோம் எனவும் தெரிவித்தார்

அவனுக இல்லாம விளையாடுறது கொஞ்சம் கஷ்டம் தான்; விராட் கோஹ்லி வேதனை !! 3

 

மேலும் இரண்டு வீரர்களும் என்ன தவறு செய்தோம் என்பதையும் இது எவ்வளவு பெரிய சர்ச்சைக்குரிய விஷயம் என்பதையும் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் கருத்தை ஆதரிக்கப்போவதில்லை எனவும் அது முற்றிலும் அவர்களது தனிப்பட்ட சொந்தக் கருத்து எனவும் கோலி தெரிவித்தார்

முன்னதாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர். இதற்காக சமூக வலைத்தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்காக பிசிசிஐ அவர்கள் இருவருக்கும் விளையாடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் என்பதால் அவருக்கு பதில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோலி கூறுகையில்,‘ஹர்திக் பாண்டியா அணியில் இல்லை என்றாலும், ஆடுகளத்துக்கு ஏற்ப, சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அதற்கு ரவிந்திர ஜடேஜா சிறப்பான தேர்வாக இருக்கும்.’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *