இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் எனவும் அவர்கள் உலக கோப்பை தொடருக்கு கண்டிப்பாக வேண்டும் எனவும் விராட் கோலி கூறியுள்ளார்

இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காத இந்திய ரசிகர்கள் இந்தியாவில் வசிக்க வேண்டாம், அவர்கள் எந்த நாட்டு வீரரை பிடிக்கிறதோ அந்த நாட்டுக்குச் செல்லலாம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபகாலமாக அசைக்க முடியாத பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். ஒரு நாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்களை எட்டி உலக சாதனை படைத்துள்ளார். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஹாட்ரிக் சதங்கள் அடித்து சிம்மசொப்னமாக திகழ்ந்தார்.

இதனால், விராட் கோலி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்து வருகின்றனர். விராட் கோலி சதம் அடித்த போதும், அவர் 10 ஆயிரம் ரன்களை குவித்த போதும் அவரை வாழ்த்தி லட்சக்கணக்கான அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தனர். அதேசமயம், விராட் கோலி ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தாலும் அவருடைய ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்காமல் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதனால், விராட் கோலிக்கு மிகப்பெரிய பலமாக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், விராட் கோலியின் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ரீட்வீட் செய்தது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த ரசிகரை கடுமையாகக் கண்டித்து விராட் கோலி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விராட் கோலி கூறியிருப்பதாவது:

ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு என்னுடைய பதில் என்னவெனில், “ என்னைப் பொறுத்தவரை இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம், வாழலாம். ஏதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள் என்று காட்டமாக கோலி பதில் அளித்துள்ளார்.

விராட் கோலி பேசும் இந்த விடியோ சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது. • SHARE
  Cricket Fan - Dhoni Lover - CSK Forever

  விவரம் காண

  ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !!

  ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து...

  2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை !!

  2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா அணி...

  ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்!

  ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்! 2019-ம் ஆண்டு நடைபெறும் 12-வது சீசன் ஐபிஎல் போட்டிக்காக ராஜஸ்தான் அணி பல்வேறு மாற்றங்களைச்...

  ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் !!

  ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் பும்ராஹ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும்...

  என்னை தக்க வைத்ததன் மூலம் ஆச்சரியம் அடைந்தேன்: கமலேஷ் நாகர்கோட்டி

  2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகி வரும் அணிகள், தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டும், மற்றவர்களை விடுவித்தும் வருகின்றன. அதன் பட்டியல்...