ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரருக்கு மெசேஜ் செய்த விராட் கோலி ! என்ன மெசேஜ் அது ? 1

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய கேரளா வீரர் அசாருதீனை  பெங்களூர் அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. இவருக்கு விராட் கோலி மெசேஜ் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது. 

ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரருக்கு மெசேஜ் செய்த விராட் கோலி ! என்ன மெசேஜ் அது ? 2

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 8 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கு ஆர்சிபி அணி தேர்வு செய்திருக்கிறது. இவரைத் தொடர்ந்து சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய கேரளா வீரர் அசாருதீனை பெங்களூர் அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. 

ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரருக்கு மெசேஜ் செய்த விராட் கோலி ! என்ன மெசேஜ் அது ? 3

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அசாருதீன் 37 பந்துகளில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இது தொடர்பாக கொடுத்த பேட்டியின் போது இவர் இந்திய அணிக்காகவும் பெங்களூர் அணிக்காக விளையாட ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோலவே தற்போது அசாருதீன் பெங்களூர் அணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்நிலையில் அசாருதீன் செல்போன் நம்பரை வாங்கி அவருக்கு விராட் கோலி மெசேஜ் செய்திருக்கிறார்.

விராட் கோலி செய்த மெசேஜில் “ஆர்சிபி குடும்பத்திற்கு வரவேற்கிறேன். சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். சையத் முஷ்டாக் அலி தொடரில் உங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது”  என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம் பெற்றது மற்றும் விராட் கோலி மெசேஜ் செய்தது போன்றவற்றை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் இதெல்லாம் கனவு போல் இருக்கிறது என்றும் அசாருதீன் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரருக்கு மெசேஜ் செய்த விராட் கோலி ! என்ன மெசேஜ் அது ? 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *