அன்று இங்கிலாந்து, இன்று நியூசிலாந்து ; தொடர்ந்து சொதப்பும் விராட் கோஹ்லி

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கேப்டன் விராட் கோலியின் மோசமான பேட்டிங் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்து வருகிறது.

வெலிங்கடனில் இன்று தொடங்கிய நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கைல் ஜேமிஸன் பந்துவீச்சில் 2 ரன்னில் விராட் கோலி வெளியேறினார். ஆப்சைடு விலகிச் சென்ற பந்தைத் தேவையில்லாமல் தொட்டு ஸ்லிப்பில் ராஸ் டெய்லரிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார் விராட் கோலி.

இந்திய அணியின் முக்கியத் தூண் அசைக்க முடியாத பேட்ஸ்மேன், ரன் மெஷின் கேப்டன் விராட் கோலி என்பதில் சந்தேகமில்லை. பல போட்டிகளில் நிலைத்து ஆடி இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ளார்.

அன்று இங்கிலாந்து, இன்று நியூசிலாந்து ; தொடர்ந்து சொதப்பும் விராட் கோஹ்லி !! 1

களத்தில் இறங்கினாலே அரை சதம் அல்லது சதம் அடிக்காமல் மீண்டும் பெவிலியன் திரும்பாமல் இருக்க மாட்டார். எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் கிங் கோலி என்ற அச்சம் எதிரணிக்கு இருந்தது. ஆனால், நியூஸிலாந்து தொடருக்கு வந்ததில் இருந்து கோலியின் பேட்டிங்கில் ஒரு மந்தமான போக்கு காணப்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

நியூஸிலாந்து தொடரில் 4 டி20 போட்டிகளில் 125 ரன்களும், 3 ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 75 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்து மொத்தம் 180 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும்.

கடந்த 19 இன்னிங்ஸ்களாக விராட் கோலியின் ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. கடந்த 19 இன்னிங்ஸ்களாக விராட் கோலி போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

கடைசியாக கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் 136 ரன்கள் சேர்த்தார் கோலி. அதன்பின் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று இங்கிலாந்து, இன்று நியூசிலாந்து ; தொடர்ந்து சொதப்பும் விராட் கோஹ்லி !! 2

 

இதுபோன்ற சதம் அடிக்காமல் விராட் கோலி நீண்ட இன்னிஸ்களாக விளையாடுவது முதல் முறை அல்ல. இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் வரை 25 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் கோலி இருந்தார். இங்கிலாந்து தொடருக்கு சென்ற மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

அதன்பின் கடந்த 2011-ம் ஆண்டில் பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 24 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் கோலி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை டஹெர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....