SYDNEY, AUSTRALIA - JANUARY 03: Virat Kohli of India walks out to bat during day one of the Fourth Test match in the series between Australia and India at Sydney Cricket Ground on January 03, 2019 in Sydney, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் கடந்த 2008ம் ஆண்டு இறந்தார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு மெல்போர்னில் நடக்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது. அதேபோலவே ஜனவரி முதல் வாரத்தில் சிட்னியில் நடக்கும் டெஸ்ட் போட்டி “பிங்க்” டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

விராட் கோலி பிங்க் நிறம் அணிந்தது என்னை நெகிழ வைத்தது! 1

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் கடந்த 2008ம் ஆண்டு இறந்தார். ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த காலத்திலேயே கிளென் மெக்ராத்தும் ஜேனும் சேர்ந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் உதவி செய்வதற்காக மெக்ராத் ஃபௌண்டேஷனை தொடங்கினர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மெக்ராத்தின் மனைவி 2008ம் ஆண்டு உயிரிழந்தார்.

இதையடுத்து 2009ம் ஆண்டு முதல் ஜனவரி முதல் வாரத்தில் சிட்னியில் நடக்கும் போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைத்து, அந்த போட்டியில் திரட்டப்படும் நிதி, மெக்ராத்தின் ஃபௌண்டேஷனுக்கும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.

விராட் கோலி பிங்க் நிறம் அணிந்தது என்னை நெகிழ வைத்தது! 2

இதுதான் சிட்னி டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் என்று அழைக்கப்பட காரணம். இந்த போட்டியில் ஸ்டம்புகள், பவுண்டரி லைன், ஸ்டேடியம் பேனர்கள் என அனைத்துமே பிங்க் நிறத்தில் இருக்கும். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் கோலி தனது பேட்டின் கைப்பிடியை பிங்க் நிறத்தில் மாட்டி வந்ததோடு குளௌசும் பிங்க் நிறத்திலே அணிந்திருந்தார்.

இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஜேன் மெக்ராத் டே என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் ரசிகர்கள் அனைவருமே பிங்க் நிற உடையணிந்து ஆதரவு தருவார்கள். சிட்னி மைதானத்தில் இருக்கும் பெண்களுக்கான பிரிவு, ஜேன் மெக்ராத் ஸ்டாண்ட் என்று அன்று ஒருநாள் மட்டும் அழைக்கப்படும்.

இதுகுறித்து அவர் கூறியதாவது

போட்டி துவங்கும் முன் ஒரு நாள் இரவு விராட்  என்னிடம் வந்து பேசினாள் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று கூறினார். இதனையடுத்து அவர் பேட்டிங் செய்ய வரும்போது அவரது கையுறை, பேட், என அனைத்திலும் பிங்க் நிறம் அறிந்திருந்தார் இது என்னை நெகிழ வைத்தது என்று கூறினார் மெக்ராத்.



  • SHARE

    விவரம் காண

    சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

    சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

    இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

    இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

    இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

    இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

    அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

    அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

    இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...